Monday, December 12, 2005

பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி

கிட்டதட்ட ஒரு மாதமாகி விட்டது. அலுவல் காரணமாக வெளியூருக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. இடையே தமிழ்மணத்தில் நிறைய நடந்தேறியிருக்கிறது.

குழலி ஸ்டாராகியிருக்கிறார். ராகவன் ஜோ அவர்களின் நட்சத்திரப் பதிவுகளையும் படிக்க வேண்டும். மோகன்தாஸ் எழுதிய தேவதையின் காதலன் என்னவாயிற்று என்று தெரியவில்லை.... படிக்க வேண்டும். குமரன் ஏதாவது புதுசா செய்து கொண்டிருப்பாரென்று நினைத்தேன். கோதைத்தமிழில் பேசிக்கொண்டிருக்கிறார். ராகவன் அடுப்படி பக்கம் போயிருக்கிறார். மதுமிதா உஷா எல்லோரும் இயல்பான பதிவுகளை அளித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும்(இது உஷாவிற்கு மட்டும்) இருக்கின்றனர். துளசி நியுசி பற்றி இன்னும் நிறைய எழுதியிருப்பாரென்று நினைக்கிறேன்.

பார்ப்போம்.... எல்லாவற்றையும் படிக்க வேண்டும். அப்புறம் நம்ம மணிகண்டன் பேசிகிட்டு இருக்காறா....?

இளவஞ்சியின் பதிவை மட்டும் நண்பனின் வீட்டிலிருந்து படித்தேன்.... பின்னூட்டமும் அளித்தாகி விட்டது....

சரி சரி எல்லாவற்றையும் படிப்போம்....

அப்புறம் ராம்கி எப்படி இருக்கீங்க.... நலம் தானே..... தலைவர் பிறந்தநாளுக்கு ஊரில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கியாச்சா?

இங்கே நாங்கள் வழங்கிக்கொண்டிருக்கிறோம். முடிந்தால் படங்கள் அனுப்பி வைக்கிறேன்....

இந்த பதிவு மூலம் தலைவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் என் பதிவுகள் தொடரும்.

18 comments:

Movie Fan said...

Welcome Back Ganesh ...

-- Vignesh

முத்துகுமரன் said...

தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

வாழ்க பல்லாண்டு

உங்கள் நண்பன்(சரா) said...

welcome back Ganesh

வினையூக்கி said...

Welcome Back, Nanbaaa

ஜோ/Joe said...

வாங்க கணேஷ்..வந்து மறுபடியும் ஜோதில ஐக்கியமாகுங்க.

ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ramachandranusha(உஷா) said...

அடப்பாவி, ஒன்னே ஒன்று எடுத்ததற்கு, என்னமோ தினமும் எழுதி எச்ச தொட்டு அழிச்சாமாதிரி கதையா கட்டுறீங்க :-)))

துளசி கோபால் said...

//அலுவல் காரணமாக வெளியூருக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது.//

ஓஓஓஓஓஓஓ... அவ்வளோதானா?

Sud Gopal said...

Welcome back,Ganesh

குமரன் (Kumaran) said...

வாங்க வாங்க கணேஷ். வாரத்துக்கு ரெண்டு தடவையாவது உங்க ரெண்டு வலைப்பதிவுகளுக்கும் வந்து ஏதாவது புதுசா எழுதியிருக்கீங்களான்னு பார்த்தது வீணாப் போகலை. :-) இராகவனின் நட்சத்திர வாரத்தில் வேலையாக வெளியூரில் இருக்கிறதா பின்னோட்டம் போட்டிருந்தீங்க. அதான் யார் வலைவீட்டுக்கும் வர்றதில்லைப் போல இருக்குன்னு நெனைச்சுக்கிட்டேன்.

Raja said...

உங்கள் பதிவின் மூலம் தலைவரை வாழத்தி விட்டு பதிவு போட முடியவில்லை என்ற வருத்தத்தை போக்கி கொள்கிறேன்.

உன்னால மட்டும் எல்லாருக்கும் லாபம். வாழ்க பல்லாண்டு

மதுமிதா said...

வாங்க கணேஷ்
எங்க காணோமேன்னு இருந்தேன்

திருப்பதியில இருந்தாராமே
தலைவரு.பத்திரிக்கையில்போட்டிருந்தாங்க.
தலைவருக்கு வாழ்த்துங்க!

என்ன பண்றது.
நான் யாருக்குமே விசிறி கிடையாது கணேஷ்.
ஆனா சந்திரமுகி பாக்கிறப்ப தலைவரு உள்ள எண்டராகுற சீன்.
இசை அதிர ஆரம்பிச்ச ஒடன கைய தட்டிட்டேன் போலிருக்கு கணேஷ்.
கடைசி ரோல வேற இருந்தோம்.
குழந்தைங்க ரெண்டும் என்ன பாத்து ஒரு முறை முறைச்சாங்க பாருங்க.

அய்யா மரவண்டு கணேஷு
சின்னபிள்ளயாவே இருந்துருக்கலாம்.

வந்த உடனே வாயை புடுங்கறீங்களே கணேஷ்
நியாயமா?

வீ. எம் said...

Welcome Back Ganesh.. !

Me too had a long long break..
After my last posting, i had to travel to Pune on emergency (ISO surviallance audit ). Was there for couple of weeks and came back to chennai yesterday !

Boston Bala said...

வாங்க

ஜெ. ராம்கி said...

நலம் நலமே. வாழ்த்துக்களுக்கு நன்றி!

தாணு said...

`மறுபடியும் கணேஷ்' தலைவருக்கு வாழ்த்தோடு வந்திட்டீங்க! வருக

Ramesh Shanmugam said...

Happy Birthday Thalaiva

G.Ragavan said...

வாங்க கணேஷ் வாங்க.

எங்கடா ஆளக் காணோமேன்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன். அப்பாடி திரும்ப வந்தீங்க.

வந்ததோடு இல்லாம நான் அடுப்படி வரைக்கும் போனதையும் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க. அதுதான் கணேஷோ!

நட்சத்திரப் பதிவுகளையும் படிங்க. பின்னூட்டங்களும் போடுங்க. நேரம் கிடைக்கைல செய்யுங்க.

NambikkaiRAMA said...

அதானே நம்ம கணேஷை ரொம்ப நாளா காணலியேன்னு பார்த்தேன். வாழ்த்து சொல்ல கரெக்ட்டா வந்துட்டீங்களே!