Friday, January 01, 2010

நேர்கோடு

திட்டமிடாமல் நிகழ்ந்ததொரு
தேடலில்
வேண்டியதை அடைந்துவிட்டப்பின்
எப்படி என்பதாய்
நீள்கிறது அந்த நேர்கோடு.
நீளமிகுதியில்
கூட்டல், கழித்தல்
அல்லது பெருக்கல்
போன்றவற்றுள்
கணத்திற்கேற்ற ஒன்றால்
என்றேனும் ஒருநாள்
வளையமாக்கப்பட்டும்
பின் ஒரு குழியில் இட்டும்
புதைக்கப்பட்டிருக்கும்.

2 comments:

Madhusoodhanan said...

The word "vaLayam" doesn't ring anything in my mind.. any metaphorical meaning meant?

Otherwise, I enjoyed your poem.
VaazhththukkaL!

(if it was to indicate heaviness, the word you are supposed to use is ganam and not gaNam)

Ganesh Gopalasubramanian said...

உங்கள் கருத்துக்கு நன்றி மதுசூதனன்.

நேர்கோடு, கணம், வளையம் எல்லாம் கணிதத்தினூடே உருவகப்படுத்த வேண்டியவை.

கூட்டல், கழித்தல், பெருக்கலின் உருவகமாகத்தான் ஆயுதங்களின் பெயரை இட்டேன். அது சொற்குற்றமென நினைக்கிறேன். இப்பொழுது திருத்தி விட்டேன்.

மீண்டும் நன்றி கவிதையைத் திருத்தியதற்கு!