சில நேரம் குழித்துவிட்டும்
சில நேரம் குவித்துவிட்டும்
எனக்கும் என் கண்ணாடிக்குமான உறவு
மட்டும் எந்நேரமும் நிகழ்கிறது
ஓடும் வண்டிச்சக்கரமும்
பறக்கும் வானூர்தியும்
மிதக்கும் நட்சத்திரங்களும்
கண்ணாடியில் தான் விழுகின்றன
வண்டிச்சக்கரம் ஓடவும்
வானூர்தி பறக்கவும்
நட்சத்திரம் மிதக்கவும்
முடிவது கண்ணாடியால் தான்
நான் உறங்கையில் அது
மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறது
எனக்கும் என் கண்ணுக்கும்
தெரியாமல்
கண்ணாடியின் இருப்பிலும்
இல்லாமையிலும் தான்
நான் இருக்கிறேன் என்பது மட்டும்
கண்ணாடிக்கு தெரியாது
5 comments:
வாங்கய்யா வாங்க.
இரண்டு வருஷம் கழிச்சு வருகையா?
நட்சத்திரப் பதிவுகளோட எஸ்கேப் ஆனீங்கன்னு நினைக்கிறேன்.
வெல்கம் பேக்.
நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாள் சென்று மீண்டும் எழுத வந்திருகிறீர்கள்.
வருக வருக !
ஆஹா வந்தாச்சா...Welcome back..
//கண்ணாடியின் இருப்பிலும்
இல்லாமையிலும் தான்
நான் இருக்கிறேன் என்பது மட்டும்
கண்ணாடிக்கு தெரியாது//
நல்லா இருக்கு :)
மீண்டும் பதிவுலகில்...!
வரவேற்பில் மகிழ்கிறேன் :)
//கண்ணாடியின் இருப்பிலும்
இல்லாமையிலும் தான்
நான் இருக்கிறேன் என்பது மட்டும்
கண்ணாடிக்கு தெரியாது//
அண்ணா நம்மன்னு சேத்துக்கோங்க :) :) :) :) அருமை அண்ணா :) :) :)
Post a Comment