Friday, December 23, 2005

அமெரிக்காவும் இந்தியாவும்

கலாச்சாரக் காவலர்களுக்காக ஒரு படம்....



அமெரிக்காவின் தாக்கம் இந்த அளவிற்கு இந்தியாவில் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் காத்ரீனாவும், ரீட்டாவும் வந்து போன பிறகு இந்தியாவில் சில பெண் புயல்கள் வீச ஆரம்பித்திருக்கின்றன. நண்பன் ஒருவன் விளையாட்டாக சொன்னான் நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி கருப்பாயி, மாரியாத்தா, காளியாத்தான்னு (சும்மா பயமுறுத்தற மாதிரி) பேரு வைக்க ஆரம்பிக்க வேண்டியதுதானாம்.

இந்த காலத்தில் யாரும் தம் மகளுக்கு இப்படி பேரு வைக்கறதில்லைன்னு நினைக்கிறேன். கிராமத்துல கூட கொஞ்சம் மாடர்னா ஷ்ரேயா, ப்ரியான்னு வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால தைரியமா கருப்பாயி, மாரியாத்தான்னு வைக்கலாம். ஆனா பாருங்க லேட்டஸ்ட்டா வந்த புயலுக்கு மாலான்னு பேரு வச்சதா கேள்விப்பட்டேன். இப்படி மாடர்ன்னா புயலுக்கு பேரு வச்சா சில பிரச்சனைகள் வரலாம்.

ஒரு உதாரணத்துக்கு கல்லூரியில மாலான்னு ஒரு பொண்ணு படிக்குதுன்னு வைங்க.... நம்ம கண்ணடிச்சான் பயலுகளும், விசிலடிச்சான் குஞ்சுகளும் புயல் வர்ற திசையில தான் உட்கார்ந்திட்டு இருப்பாங்க... அப்புறம் மாலா இவங்கள தாண்டி நடக்கும் போது.... "புயல் கரைய கடந்துடுச்சுப்பா"ன்னு வாய்ஜாலம் காட்டுவாங்க. உடனே நம்ம மாலா கோபப்படும் ஏதாவது திட்டும்..... அதற்கும் நம்ம மக்கள் சும்மா இருப்பாங்களா... மாட்டாங்க... உடனே "பாத்து மாப்ளே !! மாலா பயங்கரமா தாக்கும்.. 24 மணி நேரத்திற்கு யாரும் பக்கத்துல போகாதீங்கன்னு சன் நியூஸ்ல சொன்னாங்கன்னு" எவனாவது சொல்வான். தப்பித் தவறி புயலுக்கு ரேவதின்னு பேரு வச்சாங்கன்னு வச்சுக்கோங்க... "ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு" கோரஸ் பாடிருவாங்க....

அதுக்காக இப்படியெல்லாம் நீ பண்ணினியான்னு கேட்காதீங்க. சத்தியமா இப்படியெல்லாம் நடக்கக்கூடதுங்கிற நல்ல (??!!!) எண்ணத்துல தான் இத்த எழுதறேன். எதுக்குங்க இந்த பேர்சூட்டும் படலம். நம்மூருக்கு இது ஒத்துவரும்னு நினைக்கறீங்க .... எனக்கென்னவோ இது தேவையில்லைன்னு தோணுது...

15 comments:

சிங். செயகுமார். said...

பேர் சூட்டும் படலம் சிரிப்பாதான் இருக்கு!

ஏஜண்ட் NJ said...

//அப்புறம் மாலா இவங்கள தாண்டி நடக்கும் போது.... "புயல் கரைய கடந்துடுச்சுப்பா"ன்னு...

புயலுக்கு ரேவதின்னு பேரு வச்சாங்கன்னு வச்சுக்கோங்க... "ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு" கோரஸ் பாடிருவாங்க....//



நமீதா கடந்து போனா என்னான்னு சொல்வாங்கோ!

பொங்கி வரும் காவேரின்னா?!
;-)

Unknown said...

gyana peedam... naduvuvilley soodam kolluthurrengalae....

pudhusaa arjun padam onnu athulley immaam periya Panju muttaainnu oru paatu neenga paakaliyaaa... modhalae poi paarunga.. appuram kaveryyaavathu... godavariyaavathu...


Etho Ganesh... avaru aasaiyai appadi ippadi nekkaa blogaa potturrukaaru....

Ennikko nadichu mudicha revathyai innum ninaippulley vaichi irrukaaru ganesh..

antha Revathy thaanugalae..

NambikkaiRAMA said...

//இப்படியெல்லாம் நீ பண்ணினியான்னு கேட்காதீங்க//
கேட்கவே மாட்டோம்.

G.Ragavan said...

பேருதான.....வெச்சுக்கலாம்....அது நெனைவில நல்லா நிக்கும். போன வாட்டி கீதா வந்தப்ப...வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சு...நாங்க வெளிய வந்துட்டோமுன்னு பேசிக்குவாங்க.

கிராமத்துப் பக்கமுன்னா.....அந்த பாதகத்தி உஷா வந்தாளே..........வீட்டுச் சாமானெல்லாம் கொண்டு போயிட்டா........அடியே உஷா...ஒன்னச் சும்மா விட மாட்டேன் டீ. ஆத்தாளுக்கு நேந்து வுட்டு.....

பெறகு உஷா, கீதான்னு பேரு இருக்குறவங்களுக்குத் திண்டாட்டம். பெறகு அந்தப் பேர யாருக்கும் வெக்க மாட்டாங்க.

Ganesh Gopalasubramanian said...

இந்த நமீதா மேட்டருக்கு நான் வரலைங்க என்னைய விட்டுருங்க

Unknown said...

Ganeshu.. pottiyaaa.. unga koodavaa .. intha KOOTANI matter ellaam ungallukku theriyathaa...
inthaanga kaiya kodunga....

முத்துகுமரன் said...

//இந்த நமீதா மேட்டருக்கு நான் வரலைங்க என்னைய விட்டுருங்க//.

ஏன் உங்களுக்கு ரெம்ப சின்ன வயசு என்பதாலா:-)

குமரன் (Kumaran) said...

புயலுக்கு பொண்ணுங்க பெயர் தான் வைக்கணுமா? வைகைப்புயல் மாதிரி ஆண்கள் பெயரையும் புயலுக்கு வைக்கவேண்டியது தான். அப்ப ஆண்களை கிண்டலடிக்கும் பெண்களுக்கும் வசதியா இருக்கும்.

G.Ragavan said...

// அப்ப ஆண்களை கிண்டலடிக்கும் பெண்களுக்கும் வசதியா இருக்கும். //

என்ன கணேசு புரியாமப் பேசுறீங்க. அதெல்லாம் ஆண்கள் பெயர் வைக்க முடியாது. ஆண்களைப் பெண்கள் கிண்டலடிக்கலாமா? பண்பாடு என்னாவது? ஆண்கள் பெண்களைக் கிண்டலிப்பதால் பெண்களுக்கு ஆண்களைக் கிண்டலடிக்கும் அயோக்கியத்தனத்தைக் கற்றுத் தருகின்றீர்கள் என்று உங்கள் மேல் கணைகள் பாயும். நீங்க எதுக்கும் ரெண்டு நாள் வீட்டுல இருக்குறது நல்லதுன்னு தோணுது. (சரி சரி ரொம்ப பயந்துக்காதீங்க. ஒரு டம்ளர் மோர் சாப்பிட்டா போதும்.)

Ganesh Gopalasubramanian said...

அனைவருக்கும் நன்றி...

//கேட்கவே மாட்டோம்.//
ராமா நாம எப்பவுமே பாஸிட்டிவ் தானே... நெகடிவ் கொஸ்டின் கேட்க மாட்டோம்ல :-)

தேவ்... நீட்டிட்டேன் பிடிச்சுக்கோங்க அப்புறம் வேற ஏதாவது புயல் வந்து தூக்கிட்டு போயிடப்போகுது :-)

முத்துக்குமரன்....
//ஏன் உங்களுக்கு ரெம்ப சின்ன வயசு என்பதாலா:-)//
இருக்கலாம்.. :-)

//அப்ப ஆண்களை கிண்டலடிக்கும் பெண்களுக்கும் வசதியா இருக்கும்.//
ராகவன் சொன்னதை கேட்டீங்களா குமரன்?

//என்ன கணேசு புரியாமப் பேசுறீங்க. அதெல்லாம் ஆண்கள் பெயர் வைக்க முடியாது.//
இது குமரனுக்குத்தானே ராகவன் :-)???

ilavanji said...

கணேஷ்,

கொஞ்சநாள உம்ம தலை இங்க தெரியலையா? அதனால "அமெரிக்காவும் இந்தியாவும்" னு தலைப்ப பார்த்தவொடனே எங்க கண்டம்விட்டு கண்டம் பாஞ்சிட்டீரோன்னு நினைச்சேன்! :)

//இப்படியெல்லாம் நீ பண்ணினியான்னு கேட்காதீங்க//.. நாங்க ஏன் கேக்கறோம்.. கன்பார்ம்டு!!! (ஆளு இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கீரு.. கேர்ள்பிரண்டு இல்லைகறீரே?! நாங்க நம்பணுமாக்கும்?? )

:)

G.Ragavan said...

// //என்ன கணேசு புரியாமப் பேசுறீங்க. அதெல்லாம் ஆண்கள் பெயர் வைக்க முடியாது.//
இது குமரனுக்குத்தானே ராகவன் :-)??? //

ஆமா ஆமா ஆமா! தெரியாம கணேசுன்னு போட்டுட்டேன். மன்னிச்சிருங்க. ஆனாலும் இந்தத் திரியத் தொடங்குனது நீங்கங்குறதால.....நீங்களும் எச்சரிக்கையா இருக்குறது நல்லது.

தாணு said...

ஆண்கள் பேர் வைச்சாலும் நாங்க கிண்டலடிக்க மாட்டோம். எங்களுக்கு பேசித் தீர்க்க வேண்டிய ஏகப்பட்ட ஐட்டம்( புடவை, சீரியல், பக்கத்து வீட்டு கசமுசாக்கள்)நிலுவையில் இருக்கும்போது பொழைப்பைக் கெடுத்து உங்களைக் கிண்டலடிப்போமா???? அவங்கவங்க ரசனையே வேறேங்க!!!

பழூர் கார்த்தி said...

யோவ் கணேசு, புத்தாண்டு வாழ்த்துக்கள்யா... என்னப்பு ரொம்ப நாளா பதிவை காணோம்...