Saturday, April 22, 2006

அப்பனுக்கு தப்பாத பிள்ளை

தேர்தல் நேரங்களில் தலைவர்களின் பேச்சைக்கேட்பதென்பது அருமையான பொழுதுபோக்கு. கலைஞர், வைகோ என சிறந்த பேச்சாளர்கள் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக இருப்பதும் இந்த பொழுதுபோக்கிற்கு ஒரு காரணம். ஸ்டாலின் அவர்களின் பேச்சாற்றல் மேல் எனக்கு அந்த அளவிற்கு நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் இந்த தேர்தலில் எப்பொழுதும் போலல்லாமல் அவர் நன்றாக பேசுவதாகவே எனக்கு படுகிறது. இதிலும் தன்னை வல்லவராக்கி கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது. (அரசியலில் ஏற்கனவே அவர் வல்லவர் என்பது வைகோ எதிரணியில் இருப்பதிலிருந்தே தெரியும்)


இந்த தேர்தலில் தளபதி என களமிறங்கியிருக்கும் ஸ்டாலினின் பேச்சு பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்பது போல நையாண்டியுடன் கருத்தைச் சொல்வதில் வித்தியாசப்படுகிறார் ஸ்டாலின்.


உதாரணத்திற்கு சாலை பணியாளர் பிரச்சனை குறித்து "செல்லக்கிளி புருஷன் செவ்வாய்க்கிழமை செத்தானாம். வீடு வெறிச்சோடி கிடக்குமேன்னு அவ வெள்ளிக்கிழமை அழுதாலாம்" என அதிமுக அரசு தாமதமாக பணியாற்றும் விதத்தைக் குறித்தும், கருக் காரணத்தை விட்டு விட்டு தேவையில்லாமல் சிந்திப்பதைக் குறித்தும் சொல்லியிருக்கிறார்.


அது போலவே அரசு ஊழியர்கள் சலுகை பறிப்பு குறித்து "தலையில முக்காடு போட கோவணத்தை உருவின கதை கேட்டிருக்கீங்களா? உருவி ஊர் சிரிச்ச பின்னாடி தான் தெரிஞ்சுதான் அது கோவணம்னு. அப்புறம் உருவின கோவணத்தைத் திருப்பி கொடுத்து விட்டு இது எங்கள் வீரம்னு சொல்கின்றனர். பாவம் அவங்களுக்கு தெரியல போனது மானம்னு" இப்படியாக எள்ளி நகையாடியிருக்கிறார்.


பேச்சாற்றலை வளர்ப்பதுடன் மட்டுமல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் வளர்த்தால் அவருக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கும்.

5 comments:

ஏஜண்ட் NJ said...

கலைஞர், வைகோ, ஸ்டாலின்...

தேர்தல், பேச்சாற்றல், அரசியல், வல்லவர்...

தளபதி, நையாண்டி, எள்ளி நகையாடுதல்...

மக்கள், நல்லது, நல்லெண்ணம், நல்ல எதிர்காலம்...

ஆகா அருமை! கனகச்சிதமாக வார்த்தைகளிப் பிரயோகித்து, தமிழக மக்கள், அரசியல், வாழ்க்கை, பிரச்சினைகள், தீர்வு, உயர்வு பற்றி எழுதி கல்க்கியிருக்கிறீர்கள் கோபி!!

;-)

thamillvaanan said...

நீங்கள் ஸ்ராலினைபற்றி நல்லா சொல்கிறீர்களா? அல்லது .... சந்தேசமாயிருக்கிறது. பதிலுக்கு காத்திருக்கிறேன்.

என்னை குழப்பிய பதிவுக்கு நன்றி.

அன்புடன்
தமிழ்வாணன்.

வினையூக்கி said...

Ganesh,
Long time No see.
Regards,
Vinaiooki

Bharaniru_balraj said...

ஸ்டாலின் மேயராக இருந்த போது மாநகராட்சிப் பள்ளிகளில் கணிப்பொறிகள் வசதிகள் செய்து கொடுத்தார். நீங்கள் சென்னை வாசியாக் இருந்தால் தினமும் ஒரு முறையாவது அவர் காலத்தில் கட்டபட்ட மேம்பால்ங்களில் பயணித்திருப்பிர்கள்.

மேலும் ஒரு தகவல்: அவர் கொடுத்த் ஊக்கத்தில் அந்த வருடத்தில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் கூட +2 தேர்வில் மாநில அளவில் தேர்வு பெற்றார்கள்.

அவருடைய அப்பா போல் போராடும் குணமும், பேச்சாற்றலும் குறைவுதான் என்றாலும் தற்போது நல்ல அரசியல்வாதியாகவே தோன்றுகிறார். ( ஜெயலலிதா போல் எழுதி வாங்கி பேசவில்லை என்ற வகையில் சிறிது ஆறுதலே.)

மனசு... said...

எல்லாத் தலைவர்களுக்கும் தேர்தல்வரும் போதுதான் மக்களை சந்திச்சு அடுத்தவன் பண்ணின தப்ப சுட்டிக்காட்ட தெரியுது. ஆனா பழிக்கிறவன் என்ன செய்யபோறான்னோ இல்ல என்ன செஞ்சிறுக்கான்னோ சொலறதில்லை... கேக்குறதுக்கு மக்கள் இருக்கிறவரை இவங்க எல்லாம் பேசிட்டுதான்பா இருப்பாங்க... என்னிக்கு மக்கள் கேள்வி கேட்டு இவங்க பதில் சொல்ற காலம் வருதோ அன்னிக்குதான் நிஜமான ஜனநாயக ஆட்சி நடக்கும்... இல்லைனா அவங்க அவங்க ஆட்சிதான் நடக்கும்...

அன்புடன்,
மனசு...