யாரோ துப்பிவிட்டு
போயிருந்த பபுள் கம்
கூடவே வரும்
விளக்குக் கம்பத்
தேய்ப்பிற்குப் பிறகும்.
மட்காப்பிலோ, சக்கர ஆரத்திலோ
சிக்கிக் கொண்டு
ஓட்ட வேகத்தில்
சத்தமிட்டுக்கொண்டிருக்கும்
ஒரு பாலித்தீன் பை.
சுகாதார ஆசை
கவனம் பெற்று
நூலாம்படை நீக்குகையில்
பரணில் தட்டுப்படலாம்
ஒரு பழைய நாணயம்.
வெளிப்புறம் வழிந்த
எண்ணெய்த் துளிகள்
ஒவ்வொரு இருத்தலிலும்
தெரியப்படுத்தலாம்
புட்டியின் அடிபிம்பத்தை.
தூசி படர்ந்த
வாகன கண்ணாடியில்
என்றேனும் எழுதப்பட்டிருக்கும்
ஒரு பெயர்.
4 comments:
நல்ல கவிதைங்க.
பஸ்ஸு ஓனர் மட்டும்தான்னு நினைச்சேன். :)
ரொம்ப நல்லாருக்கு மக்கா.
நல்லாருக்கு கணேஷ்
ஆகா கவிஞர் பெருமக்களே நன்றி!!
பாரா சார்... அப்போ அப்போ வந்து திவ்ய தரிசனம் தந்துட்டுப் போறீங்க... நேர்ல உங்கள வந்து பாக்கணும்...
நேசன்... உங்களைப் படிக்க ஆரம்பிச்சப்புறம் நிறைய மாற்றமிருக்கு என்னுள்ளில்... வார்த்தைகளின் ரஸவாதம் படிச்சிட்டு இருக்கேன்... வழிகாட்டுதலுக்கு நன்றி..
Post a Comment