பற்றுதல் இல்லை
கடக்கின்றன கணங்கள்
இருப்பவைகளில் இல்லாதவைகளாக
இல்லாதிருந்தவைகளை இருந்தவைகளாக
மாற்றி மாறி
இணைவதில் சம்மதமில்லை
சிலுவையாக கூட்டலாக
இருவேறு திசையில் கோடுகள்
மோதி
நீண்டனவா நெளிந்தனவா
கோணத்தில் கவனம்
சாய்வுக்கோடு
ஏணி
இடமிருந்து வலமோ
வலமிருந்து இடமோ
மேலிருந்து கீழோ
கீழிருந்து மேலோ
இணைவது தெரிவதில்லை
வட்டங்களில்
நிலா
வடை
தெரிவுகள்
அலைகிறது கணினிச் சுட்டி
பறக்கின்றன காக்கைகள்
எதிர்பாராத மோதலின்
உடனிகழ்வான சேதமாய்
இல்லாமல் போன
ஒரு கணம்
(அதீதம்.காம் இல் வெளிவந்தது. நன்றி நண்பர் எல்.கேவிற்கு)
1 comment:
//இணைவது தெரிவதில்லை
வட்டங்களில்
நிலா
வடை
தெரிவுகள்//
இதில் *தெரிவுகள்* என்பதன் உள்ளீடு?
//பற்றுதல் இல்லை
கடக்கின்றன கணங்கள்//
..
//எதிர்பாராத மோதலின்
உடனிகழ்வான சேதமாய்
இல்லாமல் போன
ஒரு கணம்//
எதனோடும் பற்றில்லாத ஒரு கணம், தன் பற்றில்லாத, வேறு சிலவற்றின்? எதிர்பாராத மோதலின் உடனிகழ்வானது எப்படி என்று குழம்புகிறேன்.
என் கவிதை அறிவின் எல்லை உங்களுக்கு தெரியும் (:P) புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
Post a Comment