நேற்றிரவு ஆசாமி ஒருவன்
கிணறைத் தாண்டிய தவளைக் கதையை
சொல்லிச் சென்றான்
இரவில் ஒரு புறம் குதித்து
விடியலில் மறுபுறம் போய் விழுந்தது என
சாத்தியமில்லை என்றான் சாமானியன்
கிணறு எங்கிருந்தது என கேட்டான் மற்றொருவன்
ஆரம் பற்றிய கேள்வியோடு இன்னொருவன்
அது புனிதத் தவளை என்றனர் சிலர்
தவளையின் சக்தி பற்றி ஆராய்ந்தனர் சிலர்
அந்தத் தவளையைப்
பார்த்ததாகச் சொன்னது வவ்வால்
ஆசாமியிடமே கேட்டுவிடுவதென முடிவெடுத்தனர்
அப்பொழுது விடிந்திருந்தது.