Wednesday, August 24, 2005

தமிழக கல்வி முறை மாற்றம் - ஒரு அலசல்

இன்றைய இந்து நாளிதழில் +2 தேர்வின் மதிப்பீட்டு முறை மாற்றத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. (சுட்டுக)

நடிகர் ரஜினிகாந்தின் "சிவாஜி" பட உரிமைகள் 50 கோடிக்கு விற்கப்பட்ட செய்தி பரவிய அளவு இந்த செய்தி அதிவேகமாக பரவவில்லை. இந்து நாளிதழில் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் மாணவர்களின் அறிவுத்திறன், புரிதல், கற்றதை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பொருத்தே அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். (Different weightages for knowledge, understanding and applications)

'தி இந்து' வினாக்களின் தன்மையைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது...

  • Questions to be a mix of problems with different difficulty levels
  • Learning objectives to be evaluated using different types of questions across each chapter of the textbook and syllabus
  • Science and mathematics to have 60 % easy questions, 30 % with average level of difficulty and 10% will be very difficult

பாடத்திட்ட மாற்றத்தோடு (syllabus change) தமிழக அரசு தேர்வு மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வர முனைந்திருக்கிறது. இம்முறையில் மாணவர்களின் கருத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே முறை தான் மத்திய அரசின் சி.பி.எஸ்.சி தேர்வு மதிப்பீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.சி தேர்வு முறையும் அதன் மதிப்பீட்டு முறையும் பிரபலமான ஒன்று ! கடினமான ஒன்று !. அதன் கடுமையைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு இவ்வளவு நாள் அந்த மதிப்பீட்டு முறை ஒத்திப்போட்டு வந்திருக்க வேண்டும். இன்று பாடத்திட்ட மாற்றம் என்பது கட்டயாகமாகிவிட்ட பிறகு மதிப்பீட்டு முறையும் கட்டாயமாகிவிட்டது. கட்டாயத்தின் பேரில் வந்தாலும் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

இவ்வளவு நாள் இருந்த தேர்வு முறையும் மதிப்பீட்டு முறையும் மாணவர்களின் மனப்பாடத் திறனுக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்த மாற்றம் அதை உடைத்தெறியும் என்பது உறுதி. வினாக்களும் அவற்றின் கடின நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு சராசரி மாணவன் தனது மனப்பாடத்திறனின் மூலம் 60% மதிப்பெண்களை எளிதாக வாங்கலாம் ஆனால் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட மீதமுள்ள 40% மதிப்பெண்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மொத்தமுள்ள 150 மதிப்பெண்களில் வேதியியலிலும் இயற்பியலிலும் 50 மதிப்பெண்கள் ஒரு வரி வினாக்களுக்குரியதாக இருக்கும். மேலும் ஒளிவழிக் குறி உணர்வி (optical mark reader (OMR)) விடைத்தாள்களும் முன்மொழியப்பட்டிருக்கின்றன.

இத்தகைய தேர்வு முறை, பாடமுறை மற்றும் மதிப்பீட்டு முறை மாற்றங்கள் மாணவர்களின் ஆளுமையையும் அறிவு திறனையும் வளர்க்க பெரிதும் உதவும். தமிழகத்தில் பலரும் எதிர்பார்த்த அந்த "அடிப்படை அறிவும்" அந்த அறிவு சார்ந்த கல்வி முறை மாற்றத்திற்கு இது ஒரு முன்னோடியாக அமையும். கிராமப்புற மாணவர்களுக்கு இந்த மாற்றம் கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம் அப்படியிருப்பின் அடுத்த வருட தேர்வில் இந்த குறை களையப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த மாற்றம் முக்கியமான ஒன்று. ஏற்கனவே தமிழகம் இடஒதுக்கீட்டு முறையில் இந்திய அளவில் புரட்சி செய்து வரும் வேளையில் இது தமிழக கல்வி முறையில் மேலும் ஒரு மைல்கல்லாகவே வருங்காலத்தில் உணரப்படும்.

7 comments:

PositiveRAMA said...

நல்ல தகவல் கணேஷ். முதலில் புத்தகச்சுமையை குறைக்க வேண்டும். சின்ன குழந்தைகள் வருங்காலத்தில் கூன் விழுந்திடாமல் காக்க வேண்டும்.

Go.Ganesh said...

ஆமாம் ராமா எனக்கு ஒரு ஹைக்கூ ஞாபகத்திற்கு வருகிறது

ஐந்தில் வளைக்கவோ பொதியாக
புத்தக மூட்டை

PositiveRAMA said...

பலே பலே!

சுதர்சன் said...

நல்ல தகவல், நன்றி! மாற்றங்கள் நீங்கள் எழுதியுள்ளபடியே இருக்குமானால் மிகவும் வரவேற்கத்தக்கது. நீண்ட காலத்திற்கு முன்னரே செய்திருக்கப்பட வேண்டியவை, இப்பொழுதாவது செய்யப்படுகிறதே!

குழலி / Kuzhali said...

நல்லதொரு முயற்சி, இது சரியாக அமல்படுத்தப்படுமாயின் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும், அதே சமயத்தில் தேர்வில் வெற்றி பெறுவது சற்று எளிதாக(தரம் குறைந்தல்ல) இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது.

//நடிகர் ரஜினிகாந்தின் "சிவாஜி" பட உரிமைகள் 50 கோடிக்கு விற்கப்பட்ட செய்தி பரவிய அளவு இந்த செய்தி அதிவேகமாக பரவவில்லை//
அடுத்து ஒரு செய்தி என் பதிவில் போட்டிருக்கின்றேன் பாருங்கள், படித்துவிட்டு வந்து அடி போடாதீர்கள்.

நன்றி

Go.Ganesh said...

நன்றி குழலி சுதர்சன்...

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று

Anonymous said...

Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.