இதே போல ஒரு கவிதையை (அநேகமாக மீனாக்ஸ் என்று நினைக்கிறேன்) எழுதியிருந்தார். படித்த நியாபகம் இருக்கிறது. இருந்தாலும் இது என்னுடையது:-) படிச்சிட்டு யாரும் அடிக்க வராதீங்க..
அநியாயத்திற்கு பெண்கள்
அழகாய் பிறக்கிறார்கள்
பிரம்மனின் இடஒதுக்கீடு
100% பெண்களுக்குத்தான்
அழகில் மட்டும்
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
வளர்ந்தும் விடுகிறார்கள்
பருவம் வந்து பள்ளியும்
செல்கிறார்கள்
இதில் சில
கட்டப் பாவாடை
கண்மணிகளுக்கு
காளையர்கள் தெரிகிறார்கள்
ஓரக்கண்ணில் மட்டும்
காரை வீட்டுப் பெண் மனசை,
தெரிந்தோ தெரியாமலோ
ஏழை புள்ளையாண்டன்
தான் களவாடுகிறான்
சத்தமில்லாமல்
சில ஸ்கூட்டிகள்
ஹாரனால் மட்டுமே
இயங்க ஆரம்பிக்கின்றன
பெட்ரோலை விலை
பேசிவிட்டு
சைக்கிள் மணியும்
ஸ்கூட்டியின் ஹாரனும்
சில நாட்களில் நின்று
போய்விடுகின்றன
ஏதோ ஒரு மரத்தடியில்
என்றும் போகாதவன்
இன்று போகிறான்
மளிகைக் கடைக்கு
வழியில் தெய்வத்தின்
ஜன்னல் தரிசனமாம்
ஆண்டவன் இவர்களுக்கு
மட்டுமில்லாமல் அவள்
தகப்பனுக்கும் அருள்
பாலித்துவிடுகிறான்
தெரிந்து விடுகிறது
கண்டிப்பு அடி உதை
வீட்டுச்சிறை வெளியுலக
தடைச்சட்டம்...
வித்தியாசப்படுகிறது
அன்றாட வாழ்க்கை
சில நாட்களில்
வீட்டிற்கு கட்டுப்பட்டவள்
கழுத்தை நீட்டுகிறாள்
வீட்டிற்கு கட்டுப்படாதவள்
கம்பி நீட்டுகிறாள்
கம்பி நீட்டினாலும் தேடி
இழுத்து வருகிறார்கள்
முதலாமவனும் அவன் முடிச்சுக்களும்
அவிழ்க்கப்படுகின்றன
அவள் சம்மதமில்லாமல்
மஞ்சள் தாலி மறுபடி
கட்டப்படுகிறது
வேறொருவன் கையால்
இவள் கழுத்துக்கும் கணக்கிற்க்கும்
ஆறாவது முடிச்சாக
இப்படியாக முடிக்கப்படுகிறது
"முருகன்"களின்
கனவுகளூம் வாழ்க்கையும்
"ஐஸ்வர்யா"க்களால்
"காதல்" காவியமாக
11 comments:
என்ன கனேஷ் தம்பி,
திடீர்னு காதல்... ஹ்ம்ம்ம்.... என்ன மேட்டர்... அவங்க பேரு என்ன? ஐஸ்வர்யாவா?? நடக்கட்டும்..
அநியாயத்திற்கு பெண்கள் அழகாய் பிறக்கிறார்கள்
என்ன பெண்கள் அழகா பிறப்பது அநியாயம்னு சொல்றீங்களா?? ஹ்ம்ம்ம்
//அழகில் மட்டும்//
அப்போ அழகில் மட்டும் அவங்க 100% மற்ற எந்த விஷயத்திலும் அவங்க 100% இல்லைனு சொல்றீங்களா
ஷ்ரேயா, துளசியக்கா, ரம்யா அக்கா, பத்மபிரியா, சந்திரவதனா, கலையரசி.... எல்லோரும் எக்ன்கே போயிட்டீங்க??? சீக்கிரம் வாங்க...... இந்த கனேஷ் பன்ற அநியாயத்தை பாருங்க..
நாராய...... ..
Beauty is to see, not to touch.
காத்ல் கண்களைத் தாண்டி இதயம் டொடும்போது வரும் காவியம் ,கண்டிப்பாக நிலைக்கும். மன முதிர்ச்சியற்ற காதல் தோல்விதான். கணேஷுக்கு காதலிக்கும் வயசான்னு தெரியலையே?
Nice Ganesh..
similar kavithai was written by Sundarpasupathy in his blog -- mynose.blogspot.com long time back.....
Nice Ganesh..
similar kavithai was written by Sundarpasupathy in his blog -- mynose.blogspot.com long time back.....
//கணேஷுக்கு காதலிக்கும் வயசான்னு தெரியலையே//
32 vayasu kaadhalikkum vayasa illaya thanu?
நன்றி ஈஸ்வர், தாணு, சைபர் & வீ.எம்
@ஈஸ்வர்
// கணேஷ், நியாபகமா இல்ல ஞாபகமா? //
சரியா ஞாபகமில்லையே :-))
@வீ.எம்
// ஐஸ்வர்யாவா?? நடக்கட்டும்.. //
வீ.எம் ஒன்னும் ஒர்கவுட் ஆகமாட்டேங்குது....
முயற்சியில் மனம் தளராத வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறி அமர்ந்தது.....
@தாணு
//காதல் கண்களைத் தாண்டி இதயம் டொடும்போது வரும் காவியம் ,கண்டிப்பாக நிலைக்கும்.//
உண்மை தானுங்க. ஆனால் இதயம் தொட்டாலும் அது சந்தோஷக் காவியமாக மாறுவதில்லைன்னு நினைக்கிறேன். இந்தக் காலத்துக் காதல் சுயநலக் காதலா இருக்கு.
எனக்கு வயசு 23 தானுங்க. இன்னும் கல்யாணம் ஆகலை. வாழ்க்கை லட்சியம் கல்யாணம் பண்ணப் போகிற பெண்ணை அட்லீஸ்ட் ஒரு 4 மாசமாவது காதலிக்கணும்.
@சைபர்
// mynose.blogspot.com long time back//
நன்றி சைபர். யார் எழுதினதுன்னு தெரியாம இருந்தேன். படிச்ச "ஞாபகம்" இருக்கு !!
@வீ.எம்
// 32 vayasu kaadhalikkum vayasa illaya thanu? //
அது காதலிக்கப்படும் ஆளைப் பொறுத்த விஷயம்... :-)
என்ன தாணு நான் சொல்றது.
அருப்புக் கோட்டை
ஆளுக்கு என்னமோ ஆயிப்போச்சு; முதலுதவிக்கு யாராவது ஃபோன் போடுங்கப்பா; அப்படியே அவங்க அப்பா-அம்மாவுக்கும் ஒண்ணு !
கோவில்பட்டிய அருப்புக்கோட்டையா மாத்திட்டேன்; மன்னிசிக்கோங்க!
தருமி
//முதலுதவிக்கு யாராவது ஃபோன் போடுங்கப்பா; அப்படியே அவங்க அப்பா-அம்மாவுக்கும் ஒண்ணு !//
இந்த நோய்க்கு முதலுதவி எல்லாம் கொடுத்தாலும் வீண் தான்... என்ன நான் சொல்றது.
என்ன கனேஷ், 3 மணி நேர படமா எடுத்ததை இப்படி போட்டு தாக்கிட்டிங்க கவிதையில்.
//// ஐஸ்வர்யாவா?? நடக்கட்டும்.. //
வீ.எம் ஒன்னும் ஒர்கவுட் ஆகமாட்டேங்குது....
முயற்சியில் மனம் தளராத வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறி அமர்ந்தது.....
//
என்னங்க ஐஸ்வர்யாவுக்கும் விவேக்குக்கும் கல்யாணமாமே தெரியுமா உங்களுக்கு?
// என்ன கனேஷ், 3 மணி நேர படமா எடுத்ததை இப்படி போட்டு தாக்கிட்டிங்க கவிதையில். //
பிறகென்னங்க நம்மாள காதலிக்கவும் முடியல படம் போடவும் (சார் படமெடுக்கவும்) முடியல. அப்போ கவிதை எழுதிற வேண்டியது தானே
//என்னங்க ஐஸ்வர்யாவுக்கும் விவேக்குக்கும் கல்யாணமாமே தெரியுமா உங்களுக்கு? //
இந்த உலகம் ரொம்ப வேகமா இருக்குங்க வேற என்னத்த சொல்றது
Post a Comment