ஏற்கனவே இந்த வடஇந்தியன் vs தென்னிந்தியன் பற்றி எனது திகார் சிறை பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நேற்று "த வீக்" செப் 4 இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதன் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா? தென்னிந்தியாவின் தாக்கம். ஒரு ஐந்தாறு பக்கங்களுக்கு வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒரு பத்திரிக்கை என்பது நல்லது கெட்டதை எடுத்துக்கூற வேண்டுமேயொழிய அதுவே ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது. தென்னிந்தியன் வட இந்தியன் என்னும் பாகுபாடு பொதுவாக மக்கள் மத்தியில் காணப்பட்டாலும் இது ஒரு தவறான கருத்து. இதனைச் சாடாமல் இவற்றில் எது இப்பொழுது பெரிதும் விரும்பப்படுகிறது எனபது பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை தேவையேயில்லை.
அந்த கட்டுரை பல அபத்தமான விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது. தென்னிந்தியா பெரிதும் மக்களால் விரும்பப்படுகிறது என்பது தான் அந்த கட்டுரையின் சாராம்சம். இதற்கு சாம்பாரில்லிருந்து சானியாவரை ஆதாரம் சேகரித்திருக்கின்றனர். Latest south indian sensation என சானியாவையும், உலக புகழ் பெற்ற பெரும்புள்ளி என ஏ.ஆர்.ரகுமானையும் விளம்பரப்படுத்தியிருக்கின்றனர். இதற்கு ரகுமான் வேறு தனியாக பேட்டியளித்துள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து வரும் அரசியல்வாதிகளின் ஊழல் குறைவாக இருக்கிறதாம். வட இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் அதிகமாக இருக்கிறதாம். தென்னிந்தியர்கள் வட இந்தியாவிற்கு வந்தால் மொழிப்பிரச்சனை அதிகமாக இருப்பது கிடையாதாம். வட இந்தியர்கள் தென்னிந்தியாவில் பெரிதும் மொழிப்பிரச்சனைகளைச் சந்திக்கிறார்களாம். இப்படியாக செல்கிறது அந்தக் கட்டுரை.
விளையாட்டிலிருந்து விளைநிலம் வரை அனைத்திற்கும் தென்னிந்தியாவிற்கு வக்காலத்து வாங்கி அக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விளையாட்டு என்பதற்கு அஞ்சு ஜார்ஜையும், சானியா மிர்ஸாவையும் உதாரணம் காட்டியிருக்கின்றனர். அஞ்சு ஜார்ஜ்ஜும், பி.டி.உஷாவிற்கு பிறகு தென்னிந்தியாவில் விளையாட்டு என்பது வாழ்க்கைத் தொழிலாகவே மாறியிருப்பதாக கூறியிருக்கிறார்.
அரசியல்வாதிகளில் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்திருக்கிறார். தொழில்நுட்பத்தில் விப்ரோ நிறைய பேரால் விரும்பப்படுவதாக எழுதியிருக்கின்றனர். சென்னையைக்காட்டிலும் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் குடியேற மக்கள் அதிகமாக விரும்புவதாக எழுதியிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் குடியேறியிருக்கும் வட இந்தியர்கள் பெரிதும் தென்னிந்தியாவில் இருக்கவே ஆசைப்படுவதாக ஒரு புள்ளி விவரம் வேறு.
தென்னிந்தியாவிலிருந்து தான் ஒரு ஆண்டில் அதிக திரைப்படங்கள் வெளிவருகின்றனவாம். வர்த்தக ரீதியாக வெற்றியும் பெருகின்றனவாம். ஆட்டோகிராஃப் திரைப்படம் page3யை விடவும் பரினீத்தாவை விடவும் சிறந்த படமென்று மற்றொரு பிரமுகர் பேட்டியளித்திருக்கிறார். சாம்பார் தென்னிந்தயர்கள் மட்டுமில்லாமல் வடஇந்தியர்களுக்கும் பிடித்த உணவாக இருக்கிறதாம்.
மொத்தத்தில் சாம்பாரை உதாரணம் காட்டி இந்திய ஒற்றுமையை சாம்பலாக்கியிருக்கிறார்கள்.
இந்திய பிரதமராக மன்மோகன் சிங்கும், குடியரசு தலைவராக அப்துல் கலாமும் தேச பெருமையை மொழி, மத, பிராந்திய வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு நிலை நாட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தி வீக் போன்ற நல்ல பத்திரிக்கைகள் இது போன்றதொரு கட்டுரையை வெளியிட்டிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.
9 comments:
இது ஒரு மறைமுக தாக்குதல் போல்தானே இருக்குது. எல்லா வகையிலும் தெற்கு வாழ்கிறது என்ற காரணம் காட்டி கிடைக்கவேண்டிய உதவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்காமல் போய்விடும்போலிருக்கே!
forget this news magazines. 'India Today' aslo publishing such nonsense surveys(from sex to minister rating) and articles. overhyping indian movies and achivemets. so ignore these waste stuffs.
//இது ஒரு மறைமுக தாக்குதல் போல்தானே இருக்குது. எல்லா வகையிலும் தெற்கு வாழ்கிறது என்ற காரணம் காட்டி கிடைக்கவேண்டிய உதவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்காமல் போய்விடும்போலிருக்கே! //
ஆஹா....... இப்படியும் இருக்குமோ.
ganesh,
oru kaalathula unga padhivukuu - dhan varudhu.. eppo dhan en padhivu top 25 la varumnu kavalaipatteenga.. ippo paarunga orey nerathula unga 3 padhivugal top 25 la irukku.... kaala chakkaram veegama sutthuthu .. :)
vaazhthukkal..
top 25 um ganesh padivu nu vara kaalam seeikiram theriyudhu :)
// kaala chakkaram veegama sutthuthu .. :) //
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை வீ.எம். கொஞ்சம் கமர்ஷியலிசமும் பதிவுகளுக்கு தேவைப்படுகின்றது என்பதை ரொம்ப லேட்டா புரிஞ்சுகிட்டேன். அதான் இப்போ எல்லாம் துணுக்குகள் என் பதிவுகளில் இடம் பிடிக்கின்றன.
ஆனாலும் உங்க அளவுக்கு எனக்கு creativity கிடையாது.
//top 25 um ganesh padivu nu vara kaalam seeikiram theriyudhu :)//
நன்றி வீ.எம்
ஆமாம் கணேஷ், தென்னிந்தியா, வட இந்தியா என்று பிரிப்பதை விட்டு விட்டு
இந்தியாவை இந்தியாவாகப் பார்ப்போம், தகவல் தொழில்நுட்ப புரட்சியால் உலக எல்லைகளே சுருங்கி வரும் இந்த நேரத்தில், இம்மாதிரியான கட்டுரைகளை பத்திரிக்கைகள் தவிர்க்கலாம்....
// சாம்பார் தென்னிந்தயர்கள் மட்டுமில்லாமல் வடஇந்தியர்களுக்கும் பிடித்த உணவாக இருக்கிறதாம்.
மொத்தத்தில் சாம்பாரை உதாரணம் காட்டி இந்திய ஒற்றுமையை சாம்பலாக்கியிருக்கிறார்கள்.//
ஏங்க! சாம்பார் தென்னிந்தியர்களுக்கு மட்டுமில்லாமல் வடஇந்தியர்களுக்கும் பிடித்த உணவாக மாறி வருகிறது என்பது ஒற்றுமையைத்தானே குறிக்கும்? நெருங்கி வருவதைத்தானே குறிக்கும் ?தென்னிந்தியர்களுக்கும் சப்பாத்தி பிடிக்கிறது என்று சொன்னால் மட்டும் தான் ஒற்றுமையோ?
உண்மையிலேயே வடக்கர்கள் தெற்கை விரும்புகிறார்கள். பெங்களூரில் வந்து பாருங்கள். எத்தனை வடக்கர்கள் இங்கே வாழ விரும்புகிறார்கள் தெரியுமா? வடக்கும் தெற்கும் சேர்ந்து வாழ்ந்தால் அமைதி. இல்லையென்றால் அமளி.
ஜோ சொல்லியிருப்பதும் ஏற்புடையதே. வடக்கில் ஹிந்தியைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும். எங்கள் அலுவலகத்தில் குர்காவ் கிளையில் எல்லாரும் ஹிந்தியில் பேச அவர்களிடம் சண்டை போட வேண்டியதாயிற்று. இங்கு ஆங்கிலத்தில்தான் பெரும்பாலும்.
appa yane varthagathukaaga hindi padippomnu sollranga. inimel
kannadam dhan padikkanum.
Post a Comment