அமர்ந்த மாதிரி
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்
நகரும் மாதிரிகளில்
நிஜம் மாதிரி சுவர்ச் சித்திரங்ளில்
பறந்து கொண்டேயிருக்கின்றன
பறவை மாதிரிகள்.
முன் நிற்பது மாதிரி
என்னையே காட்டிக்கொண்டிருக்கிறது
கண் மாதிரி கண்ணாடி.
அந்த மாதிரி இந்த மாதிரி எந்த மாதிரியும்
இல்லாமல் இருந்தவை
முன் மாதிரியே ஆகிவிட்டன.
புரியாத மாதிரி
இருப்பவை எல்லாம்
ஒரு மாதிரி ஆகிவிடுகின்றன.
உண்மையாய் இருப்பது மாதிரியே
இருந்து கொண்டிருக்கின்றன மாதிரிகள்.
2 comments:
புரிஞ்ச மாறியும் இருக்கு. புரியாத மாறியும் இருக்கு ;-?
எல்லாமே ஒரு மாதிரியா இருந்தாலும்
நல்லாயிருக்குங்க
Post a Comment