ராமசாமியின் ஆதர்ச ஹீரோ
சிக்ஸ் பேக்குக்கு மாறி ஆறு வருடம் ஆகிறது.
இப்பொழுதெல்லாம் அவன்
அதிகம் நினைப்பது சிக்ஸ் பேக் பற்றிதான்.
நண்பர்களில் ஒருவனுக்கு
இத்தினுயூண்டு சிக்ஸ் பேக் எட்டிப்பார்ப்பதில்
இவனுக்கு அவ்வளவு பொறாமை.
நண்பனிடம் கேட்டதற்கு
தினமும் 15 கோழி முட்டைகளின்
வெண்கருவை மட்டும்
தின்பதாக கூறினானாம்.
சிமெண்ட் கோணிப்பையில்
புஜங்கள் முறுக்கேறிய ஒருவன்
சிக்ஸ் பேக் தெரிய நிற்பதை
பார்த்திருக்கிறான் ராமசாமி.
இப்பொழுது
சாலையோர விளம்பர பலகையில்
புஜங்கள் முறுக்கேறிய கையில்
தலைக்கு மேல்
வட்டகை ஒன்றை தூக்கி நிற்கும்
சிக்ஸ் பேக் தெரியாத
ஒருவனைப் பார்த்து
"பாவம்" எனக் கூறி நகர்கிறான் ராமசாமி.
No comments:
Post a Comment