Wednesday, January 08, 2020

ஒரு பகை

தற்கொலைக்கு தயாராயிருந்தான்
தண்டவாளம், மொட்டை மாடி
வேறேதும் தளவாடம்?
ஒரு துளி விஷம்?
அவனைக் கைகொண்டு
கவனமாக கடக்கச் செய்தேன்.
“நன்றி” என்றான்.
தற்கொலைக்கும் எனக்குமான பகை
அவனைப்போன்ற குழப்பத்தில்தான்
துவங்கியது!

No comments: