இன்று காலை அவுட்லுக்கைத் திறந்தால் சில நல்ல விஷயங்கள் இமெயிலில் வந்திருந்தன. அவற்றுள் ஒன்று தான் இது.
சில தலைவர்களைப் பற்றிய சில செய்திகள் வந்திருந்தன. அவற்றை இங்கு ஒரு பதிவாக இடுகிறேன்.
ஹிட்லர்:
* ஹிட்லர் மிருகங்கள் மீது அதீத பாசம் கொண்டவர்.
* இவர் அசைவம் சாப்பிட மாட்டார்.
ஒரு கொடுங்கோலனிலும் ஒரு நல்லவன் இருந்திருக்கிறான்
புடின்:
* புடின் தமது இளமை காலத்தில் ஜூடோவில் கருப்பு பெல்ட் வாங்க ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஜூடோ ஆசிரியர்கள் அவருக்கு உயரம் போதவில்லை என்று நிராகரித்து விட்டனர்.
* இன்று ஜூடோவில் புடின் கருப்பு பெல்ட் வாங்கிவிட்டார்.
என்ன நம்ம லல்லுபிரசாத் யாதவ் இளங்கலைப் பட்டம் பெற்றது போல என்று சொல்கிறீர்களா? என்ன தான் இருந்தாலும் ரஷ்ய தலைவர் ஆயிற்றே போராடித்தான் வாங்கியிருப்பார் என நினைக்கிறேன்.
அராஃபத்:
* அராஃபத் அரசியலில் ஈடுபட்டதால் இளங்கலை பட்டம் பெற அவருக்கு ஏழு ஆண்டுகள் ஆனது.
* டாம் & ஜெர்ரி டிவி நிகழ்ச்சியைப் பார்ப்பதற்க்காக அராஃபத் விருந்தினரைக் கூட பல மணி நேரம் காக்க வைப்பாராம்.
நம்ம லல்லு உட்கார்ந்து கொண்டே சுதந்திர தினத்தன்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கதைதான்.
தலாய் லாமா:
* நான்கு வயதில் திபேத்தின் முதன்மை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்
* கிட்டதட்ட 500 புத்தகங்களை எழுதிய தலாய் லாமாவின் பொழுதுபோக்கு என்ன தெரியுமா? பழைய கடிகாரங்களை சேகரிப்பதும் அவற்றைப் பழுது பார்ப்பதும் தானாம்
தலாய் லாமாவிற்க்குள் இருந்த ஐன்ஸ்டீன் யாருக்குமே தெரியவில்லை..ம்ம்
9 comments:
//* ஹிட்லர் மிருகங்கள் மீது அதீத பாசம் கொண்டவர்.
* இவர் அசைவம் சாப்பிட மாட்டார்.
ஒரு கொடுங்கோலனிலும் ஒரு நல்லவன் இருந்திருக்கிறான்//
//ஒரு கொடுங்கோலனிலும் ஒரு நல்லவன் இருந்திருக்கிறான்//
மிருகங்களிடத்தில் அன்பாயிருந்ததைச் சொல்கிறீர்களா?
இல்லை மாமிசம் உண்ணாததைச் சொல்கிறீர்களா?
அப்படி என்ன தான் பிரச்சனை இந்த கனேஷ் க்கும் லாலு க்கும்... !! நான் கேட்கலை இதை படிச்ச பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி தான் கேக்குறாங்க !!
வீ .எம்
நன்றி வன்னியன் & வீ.எம்
// மிருகங்களிடத்தில் அன்பாயிருந்ததைச் சொல்கிறீர்களா?
இல்லை மாமிசம் உண்ணாததைச் சொல்கிறீர்களா? //
இரண்டையும் சேர்த்து தான் சொன்னேன். அவர் இதயத்தில் ஏதோ கொஞ்சமாவது ஈரமிருந்திருக்கிறதே...
//இதை படிச்ச பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி தான் கேக்குறாங்க !! //
மாமி என்ன பீகாரிலிருந்து வந்தவங்களா? ரயில் நிலையத்தில் மண் குவளையில் தேநீருடன் மண்ணையும் சேர்த்து குடித்த அனுபவம் அந்த பங்கஜ மாமிக்கு இல்லை போலும்....
Amazing info for me.. Thanks
நன்றி விஜய். சில தலைவர்கள் இப்படித்தான் ஏதாவது ஒன்றை தமக்குள்ளே வைத்து மறைத்து விடுகிறார்கள். பின்னாளில் தான் அவை தெரிய வருகின்றன
/// சில தலைவர்கள் இப்படித்தான் ஏதாவது ஒன்றை தமக்குள்ளே வைத்து மறைத்து விடுகிறார்கள். பின்னாளில் தான் அவை தெரிய வருகின்றன //
அப்போ உங்களை பற்றி நிறைய விசயம் அப்புறம் வரும்னு சொல்லுங்க கனேஷ் தலைவரே ! :)
Busy? இல்ல பங்கஜம் மாமி ய பார்க்க போயிட்teeரா?? :)
கொஞ்சம் அதிsaயமா இருக்கு... என் கடைசி ரெண்டு பதிவுல உங்க கruத்து இல்லாம இருக்கு.. !!
என்னமோ கலக்குறீங்க!
இந்தவார நட்சத்திரம் உங்களை நெருங்கி கொண்டிருக்கிறது
மணி, வீ.எம் !!
நம்மைப் போல அறிமுக வலைப்பதிவர்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது.
அதனாலேயே நம்முடைய வாசகர் வட்டமும் விரிவடைந்து வருகிறது.
நீங்கள் இருவரும் எனக்களித்து வரும் விமர்சனம் ஒவ்வொன்றும் என்னை நெறிப்படுத்துகின்றன.
ஆனாலும் வீ.எம்மிற்கு குசும்பு கொஞ்சம் அதிகம் :-)
Post a Comment