Monday, June 13, 2005

கல்லூரி புத்தகங்கள்

கல்லூரி வாழ்க்கைக்குப் பின்
படித்த புத்தகங்கள் பல
எழுதியவர்கள் பலர்

வார்த்தைகள் அதிகம்
வடிவங்களும் அதிகம்
அர்த்தங்கள் அதிகம்
அறிந்தவையும் அதிகம்

பள்ளத்தில் கிடந்த என்னை
தூசு தட்டி நானே
எடுத்துக் கொண்டதும்
புத்தகங்களைப் படித்துதான்

அப்படி இருந்தும்
மனம் ஏங்குகிறது
படிக்காமல் விட்ட அந்த
கல்லூரி புத்தகங்களுக்காக !

எந்த புத்தகங்களையும் படிக்காமலே
சில சமயம் புரிந்துவிடுகிறது
புத்தகங்களும் மனிதர்களும் ஒன்றென்று !
படிக்காமல் விட்ட மனிதர்களுக்காகவும்
மனம் ஏங்கும் பொழுது

8 comments:

குழலி / Kuzhali said...

//அப்படி இருந்தும்
மனம் ஏங்குகிறது
படிக்காமல் விட்ட அந்த
கல்லூரி புத்தகங்களுக்காக !//

சத்தியமான உணமை...

வீ. எம் said...

கனேஷ்,
அருமை !!
///படிக்காமல் விட்ட அந்த
கல்லூரி புத்தகங்களுக்காக ///

கல்லூரில இத படிக்கவா உங்களுக்கு நேரம் இருந்திருக்கும்???? ஹ்ம்ம்ம்ம்...
எந்த புத்தகம்னு சொன்னீங்கனா... வாங்கி அனுப்புறேன்.. தமிழ்நாட்டுல இருகீங்களா?? இல்லை வெளிநாடா???

வீ எம்

Ganesh Gopalasubramanian said...

குழலி & வீ.எம் நன்றி

கல்லூரி புத்தகங்கள் என்னை அடிக்கடி பார்த்து நகையாடுகின்றன. வீ.எம் சொல்வது போல கல்லூரி நாட்களில் அவற்றை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை ஆனால் இப்பொழுது படிக்கவும் முடியாமல் கொடுக்கவும் முடியாமல் அவதி படுகிறேன்.

அன்பு said...

நான் புத்தகவிளையாட்டுக்கு கூப்பிட்டது http://kuppai.blogspot.com/2005/06/blog-post.html
தெரிஞ்சு எழுதினீங்களோ, தெரியாமலோ அருமை.

வீ. எம் said...

கனேஷ், தங்கள் உடல் நலம் இப்போது எப்படி உள்ளது?
என்னுடைய "குங்குமம் கேள்விகள் - என் பதில்" பதிவை நீங்கள் படிக்க வில்லையா???

லதா said...

அப்படி என்றால் "பள்ளிக்கூட"ப் புத்தகங்கள் எல்லாம் படித்துவிட்டீர்களா ? :-))

Ganesh Gopalasubramanian said...

பள்ளிக்கூட புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்காவிட்டாலும் அவை இந்நேரம் பொறிகடலைப் பொட்டலங்களாகவோ, லட்சுமி வெடிகளாகவோ இல்லை ஏதோ பரணில் அடிக்கி வைக்கப்பட்டோ இருக்கலாம். ஆனால் கல்லூரிப் புத்தகங்கள் மேஜை மீது உட்கார்ந்து கொண்டு இம்சை செய்கின்றன

Selvan said...

hi GG,

I am thiru,
would like to join,
pls help me to post text in tamil.