ஆளுயரக் கண்ணாடி
என் தனிமை.
வளைந்த நெளிந்த
குனிந்த நிமிர்ந்த
என்னை நான்
பார்த்தாகி விட்டது.
உங்களால் முன் வந்து
நிற்க முடியாதென்பதும்
எனக்குத் தெரியும்.
இருந்தும்
ஒரேயொரு கோரிக்கை!
கண்ணாடியை உடைக்கும்
சூக்குமத்தையாவது கற்றுத்தாருங்கள்.
சிதறல்களின் பிம்பங்களில்
எனது பன்மையைப்
பார்த்துக் கொள்கிறேன் நான்.
5 comments:
good one!
the idea of 'pleurality' is attractive!!
good one!
the idea of 'pleurality' is attractive!!
Thank you Kartin
//உங்களால் முன் வந்து
நிற்க முடியாதென்பதும்
எனக்குத் தெரியும்//
தனிமையை கண்டிப்பாக விரட்ட முடியாது.
Nice Lines Ganesh..
Post a Comment