Thursday, October 13, 2005

ராசிபலனும் நண்பனும்

எந்த பத்திரிகை வந்தாலும் ராசிபலன் பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்வது என்னுடைய தினசரி வழக்கம். பழக்கமென்னவோ கெட்ட பழக்கம் தான் ஆனாலும் அதன் மூலம் எனக்கு விவாதிப்பதற்கு நிறைய விஷயங்களும் சில நல்ல நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். (யாரு நம்ம ஜோதிட மாமணி பார்த்தசாரதியான்னு கேட்காதீங்க..)

ராசிபலன் பார்ப்பது மூலம் கிடைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமானவை. மிதுன ராசிக்கு இந்த வாரம் அலைச்சல்கள் அதிகம் அதனால் கற்பகாம்பாளை தினமும் வழிபட வேண்டும், இந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும், இந்த எண் உங்களுக்கு ராசியான எண் என்று குறிப்பிட்டிருப்பார்கள். ராசிபலனை அப்படியே பின்பற்றுபவராய் இருந்தால் தினமும் கற்பகாம்பாளை வழிபட கிளம்பி விடுவர். உண்மையில் அது தான் பெரிய அலைச்சலாக இருக்கும். இதையே கொஞ்சம் ஆராயும் நோக்குடன் பார்க்க ஆரம்பித்தால் கற்பகாம்பாளுக்கும் அலைச்சலுக்கும் என்ன சம்பந்தம் என்று விவாதிக்கலாம் (திட்டாதீங்க இதுவும் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இருக்கும் சம்பந்தம் போலத்தான்). சில சமயம் இது போல விவாதங்கள் பல நல்ல வரலாற்றுத் தகவல்களைத் தரும் அப்பொழுதெல்லாம் ஆச்சரியமாகவும் இருக்கும்.

ராசிபலம் பார்ப்பது மூலம் கிடைக்கும் நண்பர்கள் அதிகம். எனது பக்கத்து தெருக்காரர் ஒரு நியுமராலஜி பைத்தியம். அடிக்கடி பேசுவது கிடையாது. நான் ராசிபலன் பார்க்க ஆரம்பித்த பிறகு அவருடன் ஒரு நாள் நியுமராலஜி பற்றி விவரங்கள் கேட்டேன். அன்றிலிருந்து அவரும் நானும் அடிக்கடி சந்தித்து பேசுவதுண்டு. சில சமயம் நியுமராலஜி சில சமயம் உலக நடப்புகள் என எங்கள் பேச்சுக்கள் நீளும். நம்பர்களால் கிடைத்த நண்பர் அவர். இதே போல் மேலே சொன்ன ராசிபலன் பற்றிய விவாதங்களுக்கு நம்முடன் இருப்பவரும் நமக்கு நண்பர்களாகி விடுவர். இது போதாதென்று ராசிபலன் பார்க்காதே இதெல்லாம் வெறும் பம்மாத்து வேலை வெறும் மூடநம்பிக்கை என நமக்கு அறிவுறுத்தும் சில நல விரும்பிகளும் நமக்கு கிடைப்பர். மொத்தத்தில் ராசிபலன் மூலம் கிடைக்கும் விஷயங்களும் நண்பர்களும் அதிகம். எனது ராசிக்கு ஏற்ற பலனை நானே தீர்மானிப்பதில் எனக்கும் ஒரு சந்தோஷம். அதனாலேயே ராசிபலன் பார்க்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறேன்.

சரி சரி விஷயத்துக்கு வருவோம். என்னைப் போல நண்பன் ஒருவனும் ராசிபலன் பைத்தியம். வார பலன், மாத பலன், பிறந்த நாள் பலன் இது போக தீபாவளி பலன் பொங்கல் பலன் என்று ஒவ்வொரு பலனையும் பார்த்து தான் எந்த புது முயற்சியையும் செய்வான். அநேகமாக அவனது முயற்சிகள் எண்பது சதவிகிதம் தோல்வியில் தான் முடியும். (பின்னே முயற்சி எதற்காக செய்கிறோம் அதற்கு என்ன பலன் என்று பார்க்காமல் ராசிபலன் பார்த்தால் காரியம் நடக்குமா?) அவனுக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டால் பொறியியல் என்று சொல்லாமல் பதிமூணு வருஷமா சங்கீதம் படிக்கிறேன்னு தான் முதலில் சொல்வான்.

சமீப காலமாக அவனுக்கு சினிமாவில் பாட வேண்டும் என ஆசை. அடித்து பிடித்து யாரையோ சிபாரிசு பிடித்து, வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளரை அணுகியிருக்கிறான். அவரும் இவன் பாடலைக் கேட்டுவிட்டு சினிமாவில் பாடுமளவிற்கு உங்களுக்கு குரல்வளம் இல்லை இன்னும் நன்றாக பயிற்சி செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். நண்பனுக்கு ஏமாற்றம். வீடு வந்தவுடன் செய்தித்தாளைப் புரட்டியிருக்கிறான். வழக்கம்போல ராசி பலனைப் படித்திருக்கிறான். "இன்று உங்கள் திறமை வீணாகும் தேவையில்லாத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்" என வெளியாகியிருக்கிறது. நண்பனுக்கு உடனே அந்த இசையமைப்பாளரின் மேல் வெறுப்பு என்னிடம் வந்து அவரை சராமாரியாக வசைபாட ஆரம்பித்தான். ஏதேதோ சொல்லி நான் தான் அவனை சமாதானப் படுத்தினேன்.

இன்றும் சினிமாவில் பாட வேறு சிலரிடம் சிபாரிசுக்காகவும் அறிமுகத்திற்காகவும் அலைந்து கொண்டிருக்கிறான். முதலில் சந்தித்த இசையமைப்பாளர் சொன்ன பிரத்யேக பயிற்சியை மட்டும் இன்னும் செய்ய ஆரம்பிக்கவில்லை. விஷயம் அவனுக்கு இன்னும் பிடிபடவில்லை. அந்த பயிற்சியை ஆரம்பிக்காதவரை அப்படி இப்படி சிபாரிசு பிடித்து வேறு இசையமைப்பாளரைப் பிடித்தாலும் அவனது அன்றைய ராசிபலன் "திறமை வீணாகும்" என்றே சொல்லப் போகிறது.

சரி இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடலாம் என்று என்றைக்கெல்லாம் நினைக்கிறேனோ அன்றைக்கெல்லாம் என் ராசிபலனில் "வீண் பேச்சு" என்றிருக்கிறது:-)

27 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
டிபிஆர்.ஜோசப் said...

நானும் உங்களைப்போல் தான்.

பைத்தியமில்லை. இருந்தாலும் அதில் இன்று உங்களுக்கு தோல்வி, சங்கடம், சலிப்பு என்று வந்தால் இதையெல்லாம் சந்திக்க தயாராகிவிடுவேன். நாள் இறுதியில் அப்படி ஒன்றும் நடக்கவில்லையென்றால் ஓ நாம ஜாக்கிரதையா இருந்ததால்தான் நெனச்சுக்குவேன்.

அதுவே உங்களுக்கு நல்லது நடக்கும், வெற்றி நிச்சயம் என்றிருந்தால், 'ஆமா. இவனுங்களுக்கு வேற வேலையில்லைன்னு' நெனச்சுக்கிட்டு விட்டுருவேன். அப்படியும் ஏதாவது நல்லது நடுந்துருச்சினா 'ஐ! நடந்துருச்சே'ன்னு லேசா கொஞ்சம் மகிழ்ந்துக்குவேன்.

எல்லாம் ஒரு ஏமாத்து வேலைதான்னு தெரியும். இருந்தாலும் பழகிப்போச்சு. நிறுத்த முடியலை.

ஆனால்,நான் இந்து மதத்தைச் சார்ந்தவன் இல்லயென்பதால் இந்த பூஜை, புனஸ்காரம் என்பதிலிருந்தெல்லாம் எனக்கு விடுதலை!

பினாத்தல் சுரேஷ் said...

நான் இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் நம்பவே மாட்டேன் (என் ராசிப்படி இன்னும் 15 வருஷம் இதெல்லாம் நான் நம்ப மாட்டேனாம், அதுக்கப்புறம்தான் நம்பிக்கை வருமாம்:-)

Ganesh Gopalasubramanian said...

நன்றி ஜோசப், ராஜ் & சுரேஷ்

@ஜோசப்

//நாள் இறுதியில் அப்படி ஒன்றும் நடக்கவில்லையென்றால் ஓ நாம ஜாக்கிரதையா இருந்ததால்தான் நெனச்சுக்குவேன்.//
நான் இதனால் தான் தினமும் இரவு நேரத்தில் தான் ராசிபலன் பார்ப்பேன். அப்பொழுது சில பலன்கள் நகைச்சுவையாகத் தெரியும்.

//எல்லாம் ஒரு ஏமாத்து வேலைதான்னு தெரியும். இருந்தாலும் பழகிப்போச்சு. நிறுத்த முடியலை.//
கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அணுகி பாருங்கள் எல்லாம் இன்பமாகத் தெரியும் :-)


@ராஜ்
//இப்போவெல்லாம் வேலையிடத்துல எதாவது சின்ன பிரச்சனைன்னாலும் மனசு கிடந்து அடிச்சுக்குது.//
முதயவர்கள் இப்படி நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களால் ஏதாவது நடந்தாலும் நமக்கு நேரம் சரியில்லைன்னு நாமே நினைக்க வேண்டியதாகிவிடுகிறது.

@சுரேஷ்
//நான் இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் நம்பவே மாட்டேன் (என் ராசிப்படி இன்னும் 15 வருஷம் இதெல்லாம் நான் நம்ப மாட்டேனாம், அதுக்கப்புறம்தான் நம்பிக்கை வருமாம்:-)//
அப்படி போடுங்க... நம்ம மக்கள் இப்படி பலன் சொன்னால் தான் ஜோசியத்தை நம்பமாட்டார்கள்.

வீ. எம் said...

ஹ்ம்ம்.. நமக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும், அவ்வப்போது தின பலன் என்ன போட்டிருக்கும்னு காலண்டர்ல பார்க்கும் பழக்கம் உண்டு.. சில நேரத்தில், அடுத்த 4 நாளைக்கு என்னனு முன்னமே பார்த்து வெச்சுப்பேன்...

இந்த தின பலன் ரொம்ப காமெடியா இருக்கும்.. திங்கட்கிழமை என்ன பலன் இருக்கோ அதுக்கு நேரெதிர் பலன் செவ்வாய்கிழமைக்கு இருக்கும்...


///கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அணுகி பாருங்கள் எல்லாம் இன்பமாகத் தெரியும் :-)
///
எப்படியோ இதுனால உன்ங்களுக்கு நண்பர்கள் கிடைத்தாங்கனா அது நல்லது தான்..



சரியா சொன்னீன்ங்க! :)

தாணு said...

GANESH
HOW IS UR NUMBER FRIEND, MAKING U TO COUNT DOWN?

ONEDAY COMMUNISM, NEXT DAY RAASI PALAN? A MAN OF CONTROVERSIES / VARIABLE INTERESTS?!!!

Anonymous said...

that's so funny, i mean the ENDING. Good explain thou!

துளசி கோபால் said...

கணேஷ்,

ஏந்தான் இப்படிக் காசுக்குச் செலவு வைக்கறீங்களோ? கொசுவத்தி வாங்கியே கோபாலோட காசெல்லாம் போச்சு:-)

வேலை செஞ்ச காலத்துலே தினமும் ஃபிரண்ட்ஸோட ராசிபலன் பாக்கரது வழக்கம்.
யாருக்கு 'நண்பர்களால் செலவு'ன்னு இருக்கோ அவுங்கதான் அன்னிக்கு காஃபி வாங்கித்தரணும்:-)

dvetrivel said...

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க!
பெரியாரே வந்தாலும், அவருக்கும் ராசிபலன் சொல்லி ஒட வச்சிடுவாங்க போலருக்கே!

(என்ன பண்றது இன்னிக்கி என் ரா.ப. வில் "வீண் வம்பு"னு பொட்டிருக்கு. அது இதுதானா?

NambikkaiRAMA said...

கணேஷ்! நிறைய பதிவுகள் போட்டு கலக்குறீங்க. பணிச்சுமையால் வலைப்பக்கம் வரமுடியவில்லை. பலே! பலே!

Vaa.Manikandan said...

ennanenemoo la ezuthureeha? :)

kirukan said...

Ganesh..

I remember Jothida Thilagam, ParthaSarathy commited Suicide......
fearing that, his life is going to end in that week.......

I read this news somewhere long before..

ஏஜண்ட் NJ said...

நல்லதொரு பதிவு!

பலர் எப்படிச் சொல்வது என்று புரியாமல் தயங்கிய வேளையில், இப்படிச் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொடுத்த பதிவு!!!

பலரது உள்மன வாட்டங்களைப் போக்கிய பதிவு!!

வீண்குழப்பங்கள் நீக்கி பலருக்கு உள்ளத் தெளிவை வழங்கியுள்ள பதிவு!!!

இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்.... :-)

தருமி said...

கணேஷ்,
உங்கள் மாதிரி ஆட்களைத் திட்டி ஒரு பதிவு போடணும்னு நினச்சிருந்தேன். உங்களுக்குச் சேர்ர கூட்டத்தைப் பாத்தா, அப்டி நான் எழுதினா பெருங்கூட்டமா பாஞ்சுருவீங்க போல இருக்கே!!

G.Ragavan said...

இந்த ஜோதிடம் மற்றும் ராசிபலன்களை நம்பவே நம்பாதீர்கள். அவைகளால் ஆவதொன்றில்லை. ஆண்டவனை நம்புங்கள். எல்லா நாளும் எல்லா கோளும் நன்றே.

Alex Pandian said...

கணேஷ்,

நல்ல பதிவு. தொடர்ந்து கலக்கவும்.

- அலெக்ஸ்

Anonymous said...

We had a guest (say 2) (who was a friend of another guest (say 1)) this weekend. This guy is a doctor looking for a match and he had come home to talk abt that alliance with the guest-1. We left them to talk and when he came around for lunch to the dining room, he asked me to remove the "laughing Budha" statue. This was given as a gift by someone long time back. When we politely ignored his comments, he kept on annoying us saying that this is equivalent of Saneeswaran blah blah and he asked us to analyse the list of bad things that happened in our house after this was given to us. And he predicted that all our wealth is being sent over to the sky because the laughing Budha's palm face the sky. I really wonder why these people can't keep their mouth shut? Did we ask him any suggestions? And once he left, my FIL also got into that mood and asked us to throw the statue in a lake/river. And after that(romba naal illeenga - 3 naaldhan agi irukku) even if we have to spend for something trivial, my FIL feels that it is all cos of that statue. Ennatha solradhu ponga!

neyvelivichu.blogspot.com said...

என்னைப் போல நண்பன் ஒருவனும் ராசிபலன் பைத்தியம். வார பலன், மாத பலன், பிறந்த நாள் பலன் இது போக தீபாவளி பலன் பொங்கல் பலன் என்று ஒவ்வொரு பலனையும் பார்த்து தான் எந்த புது முயற்சியையும் செய்வான். அநேகமாக அவனது முயற்சிகள் எண்பது சதவிகிதம் தோல்வியில் தான் முடியும். (பின்னே முயற்சி எதற்காக செய்கிறோம் அதற்கு என்ன பலன் என்று பார்க்காமல் ராசிபலன் பார்த்தால் காரியம் நடக்குமா?)

unga friend peru vijaykanthaa

anbudan vichchu

neyvelivichu.blogspot.com

வீ. எம் said...

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????/

6 DAYS

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

வினையூக்கி said...

ராசி பலன்கள் ஒரு எச்சரிக்கை உணர்வை கொடுப்பதற்கே அன்றி, நிச்சயம் நடக்கும் என்று அறுதி இட்டு சொல்ல முடியாது.... நீங்கள் எழுதியதைப் போல் நானும் எண்ணியது உண்டு.
நண்பா!!!! .... என் தொடர்கதை நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன் படித்தீர்களா...... நீங்கள் என் பதிவுக்குப் பின்னூட்டமிடுவதன் மூலம் என் பதிவையும் உஙகள் வாசகர்கள் படிப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை..... ஹி ஹி ஹீ

வினையூக்கி said...

ராசி பலன்கள் ஒரு எச்சரிக்கை உணர்வை கொடுப்பதற்கே அன்றி, நிச்சயம் நடக்கும் என்று அறுதி இட்டு சொல்ல முடியாது.... நீங்கள் எழுதியதைப் போல் நானும் எண்ணியது உண்டு.
நண்பா!!!! .... என் தொடர்கதை நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன் படித்தீர்களா...... நீங்கள் என் பதிவுக்குப் பின்னூட்டமிடுவதன் மூலம் என் பதிவையும் உஙகள் வாசகர்கள் படிப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை..... ஹி ஹி ஹீ

மோகன் said...

Ganesh...
good one....keep it up..

மதுமிதா said...

கணேஷ்
ராசிபலன் படி மூன்று கரங்களுடைய நண்பர் ஒருவர் இருபது நாட்களுக்குள் புதுப் பதிவிடுவார் என்று சொல்கிறது பட்சி

தி. ரா. ச.(T.R.C.) said...

Rasipalan parttri en karuthu
rasipalan ippo eppadi irrukku.
innum aaru masam romba kashtam
apparam
athuve pazhahi vedum

Om Santhosh said...

உங்களுடைய ரிமேக்ஸ் ராசிபலன் எனக்கு மிகவும் பிடித்துள்ளது மிக்க நன்றி

Anonymous said...

My neighbor and I have been simply debating this specific subject, he's normally seeking to prove me incorrect. Your view on that is nice and exactly how I actually feel. I simply now mailed him this web site to show him your personal view. After trying over your web site I guide marked and shall be coming again to read your new posts!