Monday, November 07, 2005

எனது பயணம்

வைரமுத்து தன் தொகுப்பொன்றில் சொல்வார்

"நான் என்பது இலக்கணத்தில் ஒருமை நடைமுறையில் பன்மை. என்னைப் பொறுத்தவரையில் 'நான்' என்பது இந்த சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம்".

முற்றிலும் உண்மை. 'நான்' அடிக்கடி நினைத்துப் பார்க்கக்கூடிய வரிகள். மனிதனுக்கு 'நான்' என்பவன் அகந்தையின் சொந்தக்காரன். படைப்பாளிக்கு 'நான்' என்பவன் படைப்புகளின் வழிகாட்டி. அந்த பாத்திரத்தை அவன் எந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்கிறான் என்பதை பொருத்தே படைப்பாளி போய்ச்சேரும் இடமும் தூரமும் வெளிப்படும். பாத்திரம் காலியாக காலியாக படைப்புகள் நிரம்புகின்றன.

மேல்நிலை வகுப்புகளில் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த எனது தமிழாசிரியை திருமதி.தமிழரசியை இந்நேரத்தில் நினைவில் கொள்கிறேன். ஆனாலும் பொறியியல் படிப்பில் தமிழ் இன்னும் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ஒரு பொறியாளனான கோ.கணேஷ் இன்றும் தமிழில் ஒரு சிலர் படிக்கும் வகையில் எழுதுகிறான் என்றால் அதற்கு வைரமுத்துவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கல்லூரி படிக்கும் பொழுதும் தமிழின் மேல் இருந்த ஈடுபாடு குறையாமல் இருந்ததற்கு அவரே காரணம். என்னுடைய நட்சத்திரப் பதிவை வைரமுத்துவை வைத்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. என்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து இங்கு எழுத வைத்த மதி அவர்களுக்கும் இந்நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்லூரி படிக்கும் பொழுது எனது விரிவுரையாளர் ஒருவர் சொன்ன கருத்து இது, "மனிதனின் உண்மையான குணம் ஒருவன் அவனைப் புகழும் பொழுது அவன் சொல்லும் பதிலில் இருக்கிறது. அவனது அநேக குணாதிசயங்களை ஒரு புகழுரைக்கு அவன் சொல்லும் பதிலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். " என்னை யாராவது புகழ்ந்தால் நான் சொல்லும் முதல் பதில் "இந்த புகழுக்கு சொந்தக்காரங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கே இந்த பெருமை போய்ச்சேரட்டும்". எனக்கு தோன்றும் பதில் அது தான். தமிழ்மணத்திற்கும் இது பொறுந்தும். நான் ஒரு நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் என்னைச் சுற்றி இருப்பவர்களே காரணம்.

சமூகம் என்னை எழுதுகிறது. அதில் சிலவற்றை நான் எழுதுகிறேன். இப்படி சொல்வதனாலும் எழுதுவதாலும் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. என் புகழுக்கு என்னைச் சுற்றி உள்ளவர்களே காரணமென்றால் நான் செய்யும் தவறுகளுக்கும் என்னைச்சுற்றி உள்ளவர்களே காரணம்(போட்டாம்ல எல்லா பழியையும் உங்க மேல..). மொத்தத்தில் சமூகம் தன்னை எழுதவதற்கு என்னை ஒரு இடைநிலையாக வைத்திருக்கிறது அவ்வளவுதான்.

இப்படியெல்லாம் நம்ம முகமூடி சார் சொல்ற மாதிரி ஆழமா எழுதணும்னு ஆசை. ஆனா பாருங்க ஆழம்ணா என்ன என்று கேட்டால் அது ரொம்ப டீப்பம்மான்னு பாடற வரைக்கும் தான் என்னோட அறிவு அதுக்கும் மேல முயற்சி பண்ணினா இது ரொம்ப டூப்பம்ம்மன்னு கோரஸ் பாடிருவாங்க.

தெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் நட்சத்திரமா தேர்ந்தெடுத்திட்டாங்க.. (எல்லோரும் இந்த டயலாக்கையே சொன்னா எப்படின்னு கேட்காதீங்க) அதனால முடிஞ்ச வரைக்கும் ஆழமாகவும் அழகாகவும் எழுத முயற்சி செய்கிறேன்.

14 comments:

தாணு said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். பூகம்பம், குண்டு வெடிப்புன்னு கலங்கியிருந்திருப்பீங்க. இந்த வாரம் ஜாலியாக இருங்க!

rajkumar said...

நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

ராஜ்குமார்

Go.Ganesh said...

நன்றி தாணு, ராஜ்குமார்...

ஆமாம் தாணு கொஞ்சம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது... நாம் குண்டுவெடிப்பில் சிக்காவிட்டாலும் தெரிந்தவர்கள் யாரேனும் சிக்கியிருக்கக் கூடாதேன்னு மனசு கிடந்து அடிச்சிக்கிச்சு..... நல்லவேளையாக அப்படியொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனாலும் இறந்தவர்களை நினைத்துப்பார்க்க மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

Dharumi said...

கணேஷ்,
நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.
பத்திரமானதற்கும் (குண்டு வெடிப்பில்) வாழ்த்துக்கள்.

இந்த வாரத்தில் உங்கள் குண்டுவெடிப்புக்குக் காத்திருக்கிறோம்.

Dharumi said...

கணேஷ்,
நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.
பத்திரமானதற்கும் (குண்டு வெடிப்பில்) வாழ்த்துக்கள்.

இந்த வாரத்தில் உங்கள் குண்டுவெடிப்புக்குக் காத்திருக்கிறோம்.

மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துகள் கணேஷ்
அப்ப இங்க
http://gganesh.blogspot.com/2005/10/blog-post_13.html
நான் சொன்னது சரிதானே
எப்பிடி துல்லியமா சொல்லியிருக்கிறேன் பாருங்க

மனக்கஷ்டம் தீரணும்னா
மேலும் ஒரு பதிவு போட்டுடுங்க

இராதாகிருஷ்ணன் said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் கணேஷ்...நட்சத்திர வார ஆரம்பம் நன்றாய் இருக்கிறது. வழக்கம் போல் உங்கள் எல்லா பதிவையும் படித்துவிடுகிறேன், இந்த வாரமும்....

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் கணேஷ். இயல்பாக எழுதுங்கள் வழக்கம் போல.

G.Ragavan said...

வாழ்த்துகள் கணேஷ். நட்சத்திர கணேஷ். அதாவது சிவாஜி கணேஷ், ஜெமினி கணேஷ் மாதிரி நீங்கனும் ஜொலிக்கனுமுன்னு வாழ்த்துறேன்.

பிச்சு ஒதறுங்க. பதிவுகளை.

Go.Ganesh said...

நன்றி தருமி, மதுமிதா, இராதாகிருஷ்ணன், குமரன், தேன் துளி பத்மா, ராகவன்

முடிந்தவரை எழுதுகிறேன். அதற்கு பிறகு நீங்கள் இருக்கிறீர்களல்லவா...

Go.Ganesh said...

//எப்பிடி துல்லியமா சொல்லியிருக்கிறேன் பாருங்க//
@மதுமிதா: என்ன போன ஜன்மத்தில நம்ம நாஸ்டிரடாமஸ் அஸிஸ்டெண்ட்டா இருந்தீங்களா.... ஆனாலும் இவ்வளவு துள்ளியமா இருக்கும்னு நினைக்கலை...

//மனக்கஷ்டம் தீரணும்னா மேலும் ஒரு பதிவு போட்டுடுங்க//
தங்கள் சித்தம்... சீக்கிரம் முயல்கிறேன்.


//இயல்பாக எழுதுங்கள் வழக்கம் போல. //
@பத்மா: போன பதிவுல சொன்னது போல எல்லா புகழும் என்னைச் சுற்றி உள்ளவர்களூக்கே போய்ச் சேரட்டும்.


//நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்! //
@இராதாகிருஷ்ணன்: வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் சொந்த ஊரு என்ன இராதாகிருஷ்ணன்?


//வழக்கம் போல் உங்கள் எல்லா பதிவையும் படித்துவிடுகிறேன், இந்த வாரமும்.... //
நன்றி குமரன்.

//வாழ்த்துகள் கணேஷ். நட்சத்திர கணேஷ். அதாவது சிவாஜி கணேஷ், ஜெமினி கணேஷ் மாதிரி நீங்கனும் ஜொலிக்கனுமுன்னு வாழ்த்துறேன்.//
ராகவன் நீங்க சொன்னா சரிதான். :-)

வெளிகண்ட நாதர் said...

கோவில்பட்டி கோ கணேஷா, இவ்வார நட்சத்திர எழுத்தாளனே, வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

அடடா,
வரவேற்பை இங்கே போடணுமுன்னு தெரியாம அவசரப்பட்டு போன பதிவுலே போட்டுட்டேனே(-: