Monday, November 14, 2005

நட்சத்திரம் வாரம் சுபமஸ்து

ஒரு வழியாக நட்சத்திர வாரம் முடிவடைந்து விட்டது. ஆறு பதிவுகள் எழுதியாச்சு. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட்டாச்சு. எந்த வேலையிலும் ஓய்வு வேணுமில்ல. ஆறு பதிவுகளும் ஓரளவிற்கு நன்றாக இருந்தன என்று நினைக்கிறேன்.

கட்டுரை கவிதை கதை என்று எழுதிடலாம்ணு நினைச்சேன். கதை எழுதுவது எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது போலிருக்கிறது. எழுதிய ஒரு கதையைப் பதிவிடாமலேயே விட்டு விட்டேன். ரம்யா அக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

நான், எனக்கு வேண்டியவர்கள், சமுதாயம், கடவுள், குடும்ப வாழ்க்கை, என் ஆதர்சன் என்று இந்த வாரம் இனிதே சென்றது. எழுதிய ஆறு பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எனது ஆசிரியரைப் பற்றி எழுதிய பதிவுதான்.

அறிவியல் சார்ந்த ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து தான் ஐன்ஸ்டீனைப் பற்றிய கட்டுரை எழுதினேன். அதுவும் ரஜினி டி.ராஜ், ரஜினி ராம்கி ஆகியோரால் பாராட்டப்பட்டது. ராஜ் நான் செய்த தவறுகளை அழகாகவும் கண்ணியமாகவும் சுட்டிக் காட்டினார். முதல் முயற்சி என்பதால் சில தவறுகள் வந்து விட்டன. எதிர்காலத்தில் திருத்திக் கொள்கிறேன்.

அடுத்த பதிவு "என் மனைவியின் டைரிக் குறிப்புகள்". ஒரு சிக்கலான பதிவாகையில் இதில் சில சர்ச்சைகளும் இருந்தன. உண்மையைச் சொல்லி விடுகிறேன். அந்த நண்பரும் அந்த கவிதையும் என்னுடைய சொந்த கற்பனையே. மெளனராகம் படம் பார்த்த தாக்கத்தில் எழுதியது. அதை ஒரு பின்னூட்டத்திலும் கோடிட்டு எழுதியிருந்தேன். அதற்கு "கல்வெட்டு" தந்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்ததாக அப்துல் ரகுமான் கவிதை. ஒவ்வொரு மனிதனும் தனித்திருக்கும் பொழுது சில மனிதர்களைப் பற்றி எண்ணுவதுண்டு. அப்படி நான் தனித்திருக்கும் பொழுது அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒரு நபர் அப்துல் ரகுமான். நான் நேசிக்கும் ஒரு கவிஞர். எனக்கு ஆதர்சனப் புருஷர். அதனால் அவரது கவிதை ஒன்றை பதிவாக்கினேன்.

அப்படி இப்படி ஒரு வாரம் முடிந்தது. சொன்னது போலவே அழகாகவும் ஆழமாகவும் எழுதினேன் என்று நினைக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிந்த அனைவருக்கும் என் நன்றி.

நான் வலைப்பதிவுலகில் அதிகம் நேசிக்கும் நண்பர்கள் வீ.எம் & வா.மணிகண்டன் இங்கு வராதது வருத்தத்தைத் தந்தாலும் புதிய நண்பர்கள் சிலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது இந்த நட்சத்திர வாரம். அதற்காக மகிழ்கிறேன். மேலும் சந்திரவதனா, ரம்யா அக்கா எல்லோரும் என் பதிவுக்கு சுட்டிகளை நிறுவி தங்கள் பதிவினை ஆரம்பித்திருந்தனர். சந்தோஷமளித்த விஷயங்கள்.

நான் வலைப்பதிய ஆரம்பித்தது திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களைப் பார்த்து தான். இது வரையிலும் அவர் என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டியதில்லை. ஆனாலும் அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் என் வலைப்பதிவுகள் தொடரும் வழக்கம் போல உங்கள் ஆதரவுடன்

27 comments:

Kasi Arumugam said...

நல்ல பல்சுவை வாரம் கணேஷ். நன்றியும் வாழ்த்துக்களும்.

சினேகிதி said...

ada atukula kadaya moodidinga .
ella pathivugalume nallagathan irunthana Ganesh.

\\உண்மையைச் சொல்லி விடுகிறேன். அந்த நண்பரும் அந்த கவிதையும் என்னுடைய சொந்த கற்பனையே\\

:-)

ஜோ/Joe said...

சும்மா நச்சுண்ணு இருந்தது இந்த வாரம்.வாழ்த்துக்கள் கணேஷ்!

ilavanji said...

நல்லதொரு வாரம் கணேஷ்! வாழ்த்துக்கள்.

அந்த மனைவியின் டைரி படிக்கும்போதே ஏதோ டகால்டிவேலை பன்னறீங்களோன்னு ஒரு சந்தேகம் இருந்தது! :). உங்க டீச்சரம்மா பதிவு மனதைத்தொட்டது...

என்னைப்பற்றிய பாராட்டுகளுக்கும் நன்றி... உங்களது நல்ல தமிழ்நடையும் பிழைகளற்ற எழுத்தும் எனக்குப்பொகையா இருக்கு! :)

ஒருவாரமா வலைப்பக்கம் வரமுடியாததால மொத்தமா படிச்சிட்டு ஒரே பின்னூட்டம்! வா.மணி வரலையா? அவரு ஹைதராபாத்துல அனானிகளுக்கு எதிரா போர்முரசு கொட்டறதுல பிசியா இருக்காரப்போவ்! :)

அன்பு said...

உங்கள் உள்ளுணர்வுகளை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி, தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் கவிதையில் மயங்கி, நண்பர் ரசிகவ் அன்புடன் கவிதைக்குழுமத்தில் (anbudan@googlegroups.com) இட்டார். உங்கள் கவிதைக்கு வந்த இரு பின்னூட்டங்கள்:
-----------
ரசிகவ்,

அருமையான கவிதையை இட்டீர்கள். நன்றி

அன்புடன் புகாரி
--------------

நச் கவிதை ... அன்புடனில்
இட்ட ரசிகவுக்கு ஒரு ஓ....

ஜோ தம்பி
----------------

துளசி கோபால் said...

இந்த வாரம் நல்லாதான் இருந்தது.
எனக்குக் 'கவிதை' அவ்வளவாத் தெரியாதுன்றதாலே அதுக்கு ஒண்ணும் சொல்லலை(-:

நல்லா இருங்க.

தருமி said...

அது என்ன 'சுபமஸ்து'? வெறும் 'மஸ்து' தெரியும்..இது என்ன கணேஷ்? நல்லபடியா முடிஞ்சுதுன்னு அர்த்தமோ?

நல்லபடியா இருந்திச்சு..."நட்சத்திரம் வாரம் சுபமஸ்து"

ramachandranusha(உஷா) said...

//உண்மையைச் சொல்லி விடுகிறேன். அந்த நண்பரும் அந்த கவிதையும் என்னுடைய சொந்த கற்பனையே. மெளனராகம் படம் பார்த்த தாக்கத்தில் எழுதியது//

ஐயகோ, நான் சொல்பவை ஒவ்வொன்றாய் பலித்து வருகிறதே :-))

தாணு said...

நட்சத்திர வாரம் முடிந்ததுடன் ஓய்வெடுத்துவிடாமல், அதன் நிறை குறை பற்றி அலசியது நன்றாக இருக்கிறது. you have got a classic style!!!

ஜெ. ராம்கி said...

//ரஜினி டி.ராஜ்-ஆ??? ஹாஹா..

Sogathlyeum siritchu... engeyooo poiteengale! :-)

இப்னு ஹம்துன் said...

நீங்கள் தாரகையானதை தாமதமாகவே அறிந்தேன்.
பதிவுகள் யாவும் நல்ல சுவை.
குறிப்பாக 'மனைவியின் டைரி'
நட்புணர்வு மிக்க; தரமுள்ள பதிவுகளை தொடர்ந்து தருவதால்
அறிவிப்புப்பலகையைத் தாண்டி விட்டாலும் நீங்கள் ஒரு 'நட்சத்திரமே'. வாழ்த்துக்கள்

Voice on Wings said...

ஐன்ஸ்டின் பதிவு பிடித்திருந்தது (கருத்து வேறுபாடுகளையும் தாண்டி). சோம்பல் காரணமாக பின்னூட்டமிடவில்லை :) தொடர்ந்து ஒளிருங்கள் :)

சிங். செயகுமார். said...

இத்தனை வயதுக்குள் இவ்ளோ தெளிவா!
உன்மையிலேயே நான் ஆச்சரியபட்டேன்
சில பதிவுகள் முதிர்ந்த அனுபவம் சொல்லிற்று
வாழ்த்துக்கள் கனேஷ்

G.Ragavan said...

ஒரு பொறுப்பைக் கொடுத்தால் அதைச் சிறப்பாக செய்து முடிப்பது என்பது கணேஷின் வழக்கம் என்று இந்த வாரம் நாங்கள் நன்றாகவே தெரிந்து கொண்டோம். இன்னும் பல பெருமைகள் பெற்று வாழ்க.

அன்புடன்,
கோ.இராகவன்

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் கணேஷ். சொன்னபடி உங்கள் எல்லாப் பதிவுகளையும் இந்த வாரம் படிச்சுட்டேன். இனிவரும் பதிவுகளையும் தவறாமல் படிப்பேன். அவ்வளவு நல்லா எழுதுறீங்க. வாழ்த்துகள்.

அப்போ அந்த டைரி, நண்பர், கவிதை எல்லாமே கற்பனைதானா? நான் அப்பவே சொல்லல? :-)

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் கணேஷ்.

நட்சத்திர வாரம் முடிந்து விட்டதே என்று இருக்க வேண்டாம், தொடர்ந்து அசத்தல் பதிவுகள் கொடுங்க.

Ramya Nageswaran said...

கணேஷ்..எல்லா பதிவுகளையும் படிக்க நேரமில்லாமல் போயிடுத்து..படித்த அனைத்தும் பிடித்தது.

//கதை எழுதுவது எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது போலிருக்கிறது. எழுதிய ஒரு கதையைப் பதிவிடாமலேயே விட்டு விட்டேன். ரம்யா அக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.//

இதை நம்பவே முடியலை..மனதை தொட்ட கட்டுரை, மென்மையான உணர்வுகள் தெரிக்கும் கவிதை எழுதின ஆளுக்கு கதை வராதா??

என்னை மாதிரி 'மனைமாட்சி' {நன்றி, ப்ரகாஷ் :-)} கதைகள் எழுதாம உங்களை மாதிரி இளைஞர்கள் (சஞ்ஜித், வினோத், சுதர்சன் கோபால், பத்மப்ரியா, மாலிக் to name a few) உண்மையிலே அசத்தல் கதைகள் எழுதி கலக்கறாங்க. சீக்கிரம் அந்த ஜோதியிலேயும் கலந்துடுங்க கணேஷ்.

Anonymous said...

//உண்மையைச் சொல்லி விடுகிறேன். அந்த நண்பரும் அந்த கவிதையும் என்னுடைய சொந்த கற்பனையே//

நான் உண்மைன்னு நம்பிட்டேன். நட்சத்திர வாரத்தில் கலக்கிவிட்டீர்கள். நிறைய பதிவுகளுக்கு (படித்தேன்) பின்னூட்டமிட முடியவில்லை. அப்துல் ரஹ்மான் எனக்கும் மிகவும் பிடித்த கவிஞர். நன்றி.

Vaa.Manikandan said...

நட்சத்திர வாரம் முடிஞ்சாலும் பட்டையக் கிளப்பு ராசு!

rv said...

நல்ல வாரம் கணேஷ்.. worthy of a star..

நமக்கு கவிதையெல்லாம் வராது. அதான் அந்த பதிவுகள்ல எஸ்கேப்.

Unknown said...

கணேஷ்,
அது என்ன "சுபமஸ்து" . வஸ்து, வஸ்தாது, பிஸ்கோத்து போன்ற வரிசையில் வருதா?
இந்தக் கால இளைஞர் தருமிக்கே தெரியல என்ன மாதிரி வயசான பார்ட்டிகளுக்கு என்ன தெரியும்.

நல்லபடியா முடிஞ்சதுன்னு சொல்லறீங்கன்னு நினைக்கிறேன்.

ஆசிரியர்களின் வட்டித் தொழில் போன்ற யாரும் தொடாத விசயங்களைத் தொட்டு இருந்தீர்கள். அது பற்றிய உங்களின் கருத்துக்களில்( அல்லது நீங்கள் சொன்னவிதம் ) பல எனக்கு உடன்படாதவை. ஆசிரியர்,மருத்துவர்...என்று பல அரசுத்துறை ஊழியர்களைப் பற்றி நிறைய "-" விசயங்கள் எழுதலாம். அத்துடன் அப்படிப்போடு (http://tamilkudumbam.blogspot.com/) எழுதும் "அரசு ஊழியர்கள்" பகுதியையும் கவனித்தால் நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் நட்சத்திர வாரத்தை நீங்களே அலசி ஆராய்ந்து "+" "-" பற்றி எழுதிய இந்தப் பதிவும் நன்றாக உள்ளது.

Ganesh Gopalasubramanian said...

வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி.

//பிழைகளற்ற எழுத்தும் எனக்குப்பொகையா இருக்கு! :)//
இளவஞ்சி இந்த "பொகை" தான் எனக்கும் பொகைய கிளப்புது :-))

அன்பு உங்களுக்கும் ரசிகவ்க்கும் வாழ்த்து தெரிவித்த ஜோ, கவிஞர் புகாரிக்கும் என் நன்றி.

//அதுக்கு ஒண்ணும் சொல்லலை(-://
துளசி !! நீங்க தினமும் உங்க வரிசையில எல்லா வலைப்பதிவர்களையும் படிக்கிறீர்கள் என்பது தெரியும்.... அதென்ன கவிதைத் தமிழை மட்டும் தள்ளி வைத்துவிட்டீர்கள்... ஆதரவு கொடுங்க... துளசியோடு சேர்ந்து கவிதையும் மணக்கட்டும் தமிழ்மணத்தோடு

//நல்லபடியா முடிஞ்சுதுன்னு அர்த்தமோ?//
அஸ்து என்பது பெரும்பாலும் நெகட்டிவாகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. அதையே பாஸிட்டிவாக மாற்றுவதற்கு தான் இந்த சுபமஸ்து..

//ரஜினி டி.ராஜ்-ஆ??? ஹாஹா..//
மன்னிக்கவும் ராஜ் அது "ரஜினி ராம்கி"

// ஒருவேளை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்வீர்களோ என பலமுறை யோசித்தேன//
என்ன ராஜ் இப்படி சொல்லிட்டீங்க... தவறு சுட்டிக்காட்டப் படுவதற்கு என்றைக்குமே நான் கோபப் படுவதில்லை. நஷ்டம் எனக்கு தானே... அதனால் தான் உங்களுக்கு அளித்த பதிலிலும் என் தவறை ஏற்றுக் கொண்டு பின்பு என் ஐயப்பாடுகளைக் கேட்டேன். நீங்களும் அழகாக என் தவறுகளைப் பட்டியலிட்டிருந்தீர்கள். ஐன்ஸ்டீனை எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்த முறை ஐன்ஸ்டீன் பற்றிய பதிவெழுதி உங்களிடம் உண்மைகளைச் சரி பார்த்துக் கொள்கிறேன். ஆசிரியர் மாணவர் உறவு மாதிரி வைத்துக்கொள்வோமே...

//ஐயகோ, நான் சொல்பவை ஒவ்வொன்றாய் பலித்து வருகிறதே :-))//
உஷா !! இது பெரிய வியாதி... சீக்கிரம் கவனிங்க இல்லாட்டி ரொம்ப கஷ்டமாயிடும்... ஆனாலும் எனக்கு உங்களோட பதிலில் கொஞ்சம் ஆத்திரம் தான்... நல்லா போய்ட்டிருந்த பின்னூட்டங்களை நீங்களும் பத்மாவும் தான் திசை திருப்பிட்டீங்க....... இல்லாட்டி டோண்டு சாருக்கு போட்டியா நான் பின்னூட்டம் வாங்கியிருப்பேன்னு நினைக்கிறேன்...

//you have got a classic style!!!//
ஆஹா எனக்கு நேரம் பயங்கரமா ஒர்கவுட் ஆகுது போல சரியான ரூட்ல போய்ட்டிருக்கேன்... தாணு !! உங்களது இந்த பார்வைக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன்.... வருங்காலத்தில் என்னைச் செதுக்கிக் கொள்ள பயன்படும் பெரிய விஷயம் இது...

//Sogathlyeum siritchu... engeyooo poiteengale! :-)//
ராம்கி ! அது உங்கள சொல்ல வந்தது தான். அடுத்த பதிவு தலைவரைப் பற்றி போடலாம்னு இருக்கேன். சீக்கிரம் எதிர்பாருங்கள்...

//ஒரு 'நட்சத்திரமே'. வாழ்த்துக்கள்//
இப்னு ! எனக்கு நண்பர் வா.மணிகண்டன் மீது கொஞ்சம் கோபம்.. அதாவது தமிழ்மண்த்தில கவிதை செல்லுபடியாகதுன்னு சொன்னார்... அதான் நட்சத்திர வாரத்தில் இரண்டு கவிதைகளைப் பதிவாக்கி விட்டேன். மணிகண்டன் அவரோட ஆதங்கங்களிலிருந்து இதை நீக்கிவிடலாம் :-)

//தொடர்ந்து ஒளிருங்கள் :)//
ஆஹா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து வாய்ஸ் கொடுக்கறீங்களே

//சில பதிவுகள் முதிர்ந்த அனுபவம் சொல்லிற்று//
ஆமாம் செயகுமார் ! வலைப்பதிவுகளில் வந்த எட்டு மாதங்களில் கொஞ்சம் எழுத்து மெருகேறியிருக்கறதென்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்வது அதனை ஊர்ஜிதப்படுத்துகிறது.

//இன்னும் பல பெருமைகள் பெற்று வாழ்க.//
இராகவன்... கவிதைகளுக்கு உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்த்தேன்... இன்றைக்கு அதனைத் தீர்த்து விட்டீர்கள்

//நான் அப்பவே சொல்லல? :-)//
குமரன் !! கவிதை படிச்சா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது :-)))

//தொடர்ந்து அசத்தல் பதிவுகள் கொடுங்க.//
இப்பவெல்லாம் நிறைய கதைகள் படிக்க ஆரம்பிச்சுட்டேன் பரஞ்சோதி !! உங்களுக்குப் போட்டியா ஒவ்வொண்ணா பதிவுல போடப் போறேன்... :-)

//ஆளுக்கு கதை வராதா??//
ஓஹோ... கதை எழுதுவதெப்படின்னு சொல்லித் தரமாட்டேன்னு சொல்றீங்களா :-))

//மனைமாட்சி... to name a few//
எல்லார்கிட்டையும் கேட்டு விடுகிறேன்... ஆனாலும் உங்க பின்னூட்டத்தில் நீங்கள் வெளிப்படையா பேசியிருந்தது மனையில் நீங்கள் மாட்சியுடன் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தியது... பிரகாஷ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்...

//நான் உண்மைன்னு நம்பிட்டேன்//
அப்டிபோடு !! அப்டிபோடுங்க .....

//பட்டையக் கிளப்பு ராசு!//
யோவ் மணி இங்க வர்றதுக்கு இப்பத்தான் பாதை தெரிஞ்சதா.... ரொம்ப மோசமய்யா நீர்.... பதிவுல எவ்வளவு ஃபீல் பண்ணியிருக்கேன் பாருங்க ...:-(

//அதான் அந்த பதிவுகள்ல எஸ்கேப்.//
இராமநாதன்... கவிதையும் எழுதுங்க.... உங்களால முடியும்....

//எழுதும் "அரசு ஊழியர்கள்" பகுதியையும் கவனித்தால் நல்லது.//
கல்வெட்டு கண்டிப்பாக பார்க்கிறேன்... அரசு ஊழியர்களின் அந்த வட்டி விஷயம் எனக்கு நெருடலாக இருந்த ஒன்று... அதைத் தெளிவு படுத்திக்கொள்ளலாமே என்றுதான் அந்த பதிவு... ஆனலும் அந்த பதிவின் சாராம்சத்தை வேரு தொணியில் தான் அமைத்திருந்தேன்.

//"+" "-" பற்றி எழுதிய இந்தப் பதிவும் நன்றாக உள்ளது.//
நன்றி கல்வெட்டு... நீங்கள் மெளனராகத்திற்கு அளித்த பதில் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது... ஏனா அந்த திரைப்படம் பார்த்த தாக்கம் எனக்கு இரண்டு நாட்கள் இருந்தது.... தாக்கத்தின் விளைவு தான் அந்த கவிதை..

எல்லோருக்கும் என் நன்றி.... இந்த வாரம் ஜொலிக்கப் போகும் நட்சத்திரம் இராமநாதனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பத்மா அர்விந்த் said...

Go.. Ganesh.
I meant keep going with your blogs. Nice week.

முகமூடி said...

கணேஷ்.. எல்லா பதிவுகளும் படித்தேன். நல்லாயிருந்தது உங்கள் வாரம்.

Vaa.Manikandan said...

நான் எல்லாவற்றையும் கவனித்தேன் தோழரே.ராசு,எல்லோரும் பட்டையக் கிளப்பும் போது நாம எல்லாம் உள்ள வரணுமா?மனசு கஷ்டப்பட்டா மன்னிசுக்கப்பா..மணி கஷ்டதுல கூட நிப்பான்...என்ன பண்றது?உன் கூட பேசினாசென்டிமென்ட் பிச்சுகுது அப்பு....ஆறு பதிவுமே அட்டகாசம்....அப்படியே சுறுசுறுப்பா எழுது தல...

யாத்ரீகன் said...

எல்லாரும் சொன்னதேதான் கணேஷ்..

பதிவுதொட்ட களங்களும் அருமையான தேர்வு.. :-)

-
செந்தில்/Senthil

Inventor suriya said...

கணேஷ்.. எல்லா பதிவுகளும் படித்தேன். நல்லாயிருந்தது உங்கள் 2007 பதிவு????????????????