Saturday, November 12, 2005

அப்துல் ரகுமானும் புத்தகங்களும்

சமீபத்தில் ஒரு ஹைக்கூ படித்தேன்.
"புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்".

யார் எழுதியது என்று தேடிப் பார்த்ததில் கவிஞர் அப்துல் ரகுமான் எழுதியது என்று தெரிய வந்தது. சரி அப்துல் ரகுமானைப் பாராட்டி பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். சூரியனைப் பற்றி ஒரு தீக்குச்சி எழுதலாமா அல்லது எழுததான் முடியுமா? முயற்சியைக் கைவிட்டு விட்டேன். ஆனாலும் மனசு கேக்கல. நாம தான் எழுத கூடாது வேற யாராச்சும் எழுதியிருப்பாங்க அத்த எடுத்து போடலாம்னு நினைச்சேன். "பித்தன்" கவிதைத் தொகுப்பை எடுத்து படிக்கலானேன். ஆனால் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததுமே. அவரைப் பற்றி அவரே இரு கோணங்களில் எழுதியிருந்தார். அநேகமாக எல்லோரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் இன்னொரு முறை நினைவு படுத்துவதற்காகவே இந்த பதிவு.

அவர் ஆலாபனை என்றொரு தொகுப்பும், பித்தன் என்றொரு தொகுப்பும் எழுதியிருக்கிறார். ஆலாபனையை நேர்களின் ரசிகன் என்றும் பித்தனை எதிர்களின் உபாசகன் என்றும் கூறியிருக்கிறார். பித்தன் எதனை எல்லாம் முரணாக பார்க்கிறான் என்பதை பித்தன் என்னும் தொகுப்பில் கவிதைகளாக்கியிருக்கிறார்.

உங்களுக்காக ஒரு கவிதை இங்கே. அதிலிருந்து எடுத்தது தான் மேலே சொல்லியிருந்த ஹைக்கூ.

புத்தகம்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

எனக்கென்னவோ முரணாக சொன்னாலும் இன்றைய தேதியில் அதுதான் உண்மையோ என்று தோன்றுகிறது. விளைவு பித்தன் எனக்கு சித்தனாகிப் போனான்.

14 comments:

rv said...

//"பித்தன்" கவிதைத் தொகுப்பை எடுத்து படிக்கலானேன்.//

நல்லாத்தானே இருந்தீங்க கணேசரே.. என்னாச்சு.. ரெண்டு நாளா ஒரே கவித கவித ன்னு ஆயிட்டீங்க. ?? concerned!

சினேகிதி said...

nalla kavithai..vasika vaithathuku nanri Ganesh.

சினேகிதி said...

enaku niraya puthangal kidapathilai.Indiavilurnthu vanth oru cousin Arivumathyin "Natpukalam" m Kabilan Vairamuthuvin 'Endran kavijan" m thanthala padithen.have u read them??

யாத்ரீகன் said...

எளிமையான வார்த்தைகள்... நிதர்சனமான அற்புத கருத்துக்கள்...

இன்றைய கல்விமுறைக்கு சரியான சாட்டையடி.. ஆனால் இதற்கு யார் பதிலலிக்கப்போகின்றனர்.. பத்தோடு பதினொன்றாக, நல்ல கவிதைகள் என்ற போர்வையில் நூலகங்களில் உறங்கப்போகின்றதா :-(

இதெல்லாம் பாடப்புத்தகங்களில் வைச்சா நல்லாவே இருக்கும்..

யாருக்காவது இந்த புத்தகத்தை விற்கும் online store இருக்கின்றதா என்று தெரியுமா ?!

முத்துகுமரன் said...

மிக அற்புதமான தொகுப்பு பித்தன்.

உண்மைகளை அதன் வடிவிலேயே பார்ப்பவர்களை இந்த மானிட உலகம் இதுவரை பித்தர்கள் என்றே சொல்லி இருக்கிறது..

நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளிலுள்ள வாழ்க்கை தத்துவங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பார்....


தொடர்ந்து வாசிக்க ஒரு நல்ல வலைப்பூ உங்களது....

வாழ்த்துகள்

இப்னு ஹம்துன் said...

கணேஷ்,
'பித்தன் ' என்னிடமும் உண்டு.
நல்ல் கவிதைகள்.

'அதிகார அந்தப்புரங்களுக்கு
அலிகளைத் தயாரிக்கும்
தொழிற்சாலைகள்'
என்று 'மெக்காலேயின் கல்வி முறையை' இன்னொரு கவிதையில்கவிக்கோ சாடியிருக்கிறார்.

'பெற்றேன் என்பாய், பெற்றாயா..?
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
கற்றேன் என்பாய் எதை கற்றாய்- வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை'
(இதுவும் 'கவிக்கோ' தான் - மற்றொரு கவிதையில்)

(எழுதுவதற்கு நிறைய இருக்குறது, நேரம் தான் இல்லை)

Ganesh Gopalasubramanian said...

@இராமநாதன்
//கவித கவித ன்னு ஆயிட்டீங்க. ?? cஒன்cஎர்னெட்!//
உண்மையைச் சொல்ல்லணும்னா நான் கவிதைகளுக்குத்தான் முதல் ரசிகன். என் ஆரம்ப கால பதிவுகளைப் பார்த்தீங்கன்னா தெரியும். உங்களுக்காக சுட்டி இங்கே.
ஆனா தமிழ்மணத்தில் கவிதை விரும்பிகள் ரொம்ப கம்மி. அதனால் இவ்வளவு நாள் கவிதைகளைப் பதிவாக இடவில்லை. இது நட்சத்திர வாரமாயிற்றே நம்முடைய ரசனைகளிலிருந்து எடுத்து விட வேண்டியதுதானே. அதான் கவித கவிதன்னு ஆரம்பிச்சுட்டேன்.

http://gganesh.blogspot.com/2005_03_01_gganesh_archive.html

@சினேகிதி
அறிவுமதியின் "நட்புக்காலம்" எனக்கு மிகவும் பிடிக்கும்... தமிழில் வணிக ரீதியாக அதிக காப்பிகள் விற்ற புத்தகங்களின் பட்டியலில் கண்டிப்பாக நட்புக்காலமும் இருக்கும். கபிலன் வைரமுத்துவின் தொகுப்பை இன்னும் படிக்கவில்லை.

@செந்தில்
//நல்ல கவிதைகள் என்ற போர்வையில் நூலகங்களில் உறங்கப்போகின்றதா :-(//
இருக்கலாம். பித்தன் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை எந்த மாற்றமும் வரவில்லையே :-(... கவிஞர்களின் கற்பனையும் கருத்துக்களும் சமுதாய மறுமலர்ச்சிக்கு இன்னும் வித்திடவில்லை என்பதையே இது காட்டுகிறது.
நம்மால் முடிந்தது ஒரு நல்ல ரசிகனாக அப்துல் ரகுமானை ரசிப்பதுதான். நான் அவர் கவிதைகளுக்கு அடிமை.

@முத்துக்குமரன்
//இந்த மானிட உலகம் இதுவரை பித்தர்கள் என்றே சொல்லி இருக்கிறது..//
நிதர்சனம்.

//நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளிலுள்ள வாழ்க்கை தத்துவங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பார்....//
பித்தனில் இன்னொரு கவிதையில் சொல்லியிருப்பார்

"உங்களால் படிக்க முடியாதபோது எழுத்துக்களைக் கிறுக்கல் என்கிறீர்கள்
எழுத்துக்களால் எழுத முடியாதபோது நான் கிறுக்குகிறேன்"

அவருக்கு நிகர் அவரே

//தொடர்ந்து வாசிக்க ஒரு நல்ல வலைப்பூ உங்களது....//
நன்றி முத்துக்குமரன். உங்களைப் போன்றவர்களின் அன்பாலும் ஆதரவாலும் என்னால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கிறேன்.

@இப்னு
//(எழுதுவதற்கு நிறைய இருக்குறது, நேரம்தான் இல்லை)//
என்னடா அப்துல் ரகுமானை எழுதியிருக்கிறோம் இன்னும் இப்னு வரவில்லையே என்று நினைத்தேன். என் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள். நான் முன்னர் எழுதிய கவிதை பற்றிய பதிவொன்றுக்கு நீங்கள் அளித்த பின்னூட்டம் நினைவில் இருக்கிறது :-)

நீங்கள் குறிப்பிட்ட கவிதை இடம் பெற்ற தொகுப்பெதென்று தெரிந்து கொள்ளலாமா?

இப்னு ஹம்துன் said...

//நீங்கள் குறிப்பிட்ட கவிதை இடம் பெற்ற தொகுப்பெதென்று தெரிந்து கொள்ளலாமா?//

நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட 'சுட்டுவிரல்' கவிதை தொகுப்பு என்று நினைக்கிறேன்.
முன்பு முத்தாரத்தில் தொடராக வெளிவந்த போது படித்தது தான்.
குறிப்பிட்ட கவிதை வரிகளையும் நினைவிலிருந்து தான் எடுத்து எழுதுகிறேன்

தாணு said...

உங்க கவிதை எப்படியிருக்கும்னு காட்ட ஒரு சொந்த கவிதையும் போட்டிருக்கலாம்

Anonymous said...

I still don't understand the hindu psyche. Why you cowards are praising the jihadis? abdul rahman is a known fundamentalist. May be this is your stockholm syndrome!

முத்துகுமரன் said...

கணேஷ் நீங்கள் கவிதையின் ரசிகரா?
நானும் பெரும்பாலும் கவிதைகள் படிப்பதை படைப்பதையே விரும்புவேன்....

நேரமிருந்தால் என்னுடைய தீபங்கள் பேசும் கவிதை தொகுப்பை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்

www.deepangalpesum.blogspot.com

அன்புடன்
முத்துகுமரன்

பரஞ்சோதி said...

கணேஷ் கலக்குறீங்க.

கவிக்கோவின் கவிதை என்றால் தனிப்பிரியம் உண்டு, இக்கவிதை மிகவும் அருமை.

Unknown said...

நல்ல கவிதை. தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி
இதில் இப்னு ஹம்துனின் பின்னூட்டமும் சேர்ந்து
கவிக்கோவின் கவிதைகளைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றது.

Anonymous said...

Good brief and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you as your information.