Friday, May 27, 2005

கிரிக்கெட், ஃபுட்பால் & ஹாக்கி.........

இன்றைய இந்துவின் விளையாட்டுச் செய்திகள்.

மூன்றில் முதலுரிமை தேசிய விளையாட்டு ஹாக்கிக்கு. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. லென் அய்யப்பா சிறப்பாக விளையாடினார். லென் அய்யப்பாவின் திறமையின் மீது சில கேள்விகள் எழுப்பப்படுகின்ற இந்த வேளையில் அவர் நன்றாக விளையாடியிருப்பது ஒரு போர்க்கால நடவடிக்கையைப் போன்றதாகும். தன்னம்பிக்கைக்கு ஒரு சான்று.

ஃபுட்பால். சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் நேற்று இரவு நடைபெற்றது. மிகவும் விருவிருப்பான போட்டியாக அமைந்தது. லிவர்பூலும் எ.சி.மிலன் அணியினரும் மோதினர். முற்பாதி ஆட்டத்தில் மிலன் அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். இந்த அணியின் மால்டினி, செவசென்கோ, க்ரெஸ்போ ஆகியோர் முதற்பாதியில் கோல் அடித்தனர். ஆட்டத்தில் கண்டிப்பாக மிலன் அணியினர் தான் ஜெயிப்பார்கள் என்ற நிலையிருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் அதுவும் ஏழு நிமிடங்களில் லிவர்பூல் அணியினர் மூன்று கோல்கள் அடித்தனர் (ஜெர்ரார்ட், ஸ்மைசர், அலான்ஸோ). பரபரப்பான அந்த ஏழு நிமிடங்களில் அற்புதமான விளையாட்டுத்திறனையும் போராடும் திறனையும் லிவர்பூல் அணியினர் வெளிப்படுத்தினர். ஆட்டம் சமநிலையில் இருந்ததனால் டைபிரேக்கர் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில் லிவர்பூல் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றனர். இறுதி வரை போராடும் மனோதிடத்திற்கு இந்த ஆட்டம் ஒரு நல்ல உதாரணம்.

கிரிக்கெட்: லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். (ஒண்டே கிரிக்கெட்டிலும் பொறிக்கலாம் என்பவர்களுக்கு ஒரு சபாஷ்). நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் லாராவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. நேர்த்தி, தன்னம்பிக்கை மற்றும் துடிப்பு மூன்றிற்க்கும் லாராவை உதாரணம் காட்டலாம். நேற்று இவர் அதிரடியாக விளையாடினார். 120 பந்துகளில் 130 ரன்கள் குவித்தார். இதில் பதினாறு ஃபோர்களும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். ஜெஃப்ரி பாய்காட் சொல்வது போல "right man in wrong place" அது லாராவுக்குத்தான் 100% பொருந்தும். வெஸ்ட் இண்டீஸ் அணி நன்றாக சொதப்பி வரும் கால கட்டத்தில் லாரா மட்டும் இன்னும் மின்னும் நட்சத்திரமாக இருப்பது அவரது திறனையும் தன்னம்பிக்கையும் பறை சாற்றுகிறது. டெண்டுல்கரா லாராவா என்றால் என்னுடைய ஓட்டு லாராவுக்குத்தான். நீங்க என்ன சொல்றீங்?

மூன்று செய்திகளுமே ஆட்டத் திறமையைத் தவிர்த்து வீரர்களின் ஏனைய திறமைகளுக்கும் தன்னம்பிக்கைக்கும் சான்றாக அமைந்தவை. இவற்றைப் படிக்கும் பொழுது இன்று wordsmith.orgல் ஒரு quote_ஐப் படிக்க நேர்ந்தது.

A stereotyped but unconscious despair is concealed even under what are called the games and amusements of mankind.
-Henry David Thoreau, naturalist and author (1817-1862)


முற்றிலும் உண்மை.

2 comments:

Anonymous said...

//ஆனால் இரண்டாம் பாதியில் அதுவும் கடைசி ஏழு நிமிடங்களில் லிவர்பூல் அணியினர் மூன்று கோல்கள் அடித்தனர் (ஜெர்ரார்ட், ஸ்மைசர், அலான்ஸோ). பரபரப்பான அந்த ஏழு நிமிடங்களில் அற்புதமான விளையாட்டுத்திறனையும் போராடும் திறனையும் லிவர்பூல் அணியினர் வெளிப்படுத்தினர். //

அது கடைசி ஏழு நிமிடங்கள் அல்ல , இரண்டாம் பாதியின் முதல் ஏழு நிமிடங்கள்.

Ganesh Gopalasubramanian said...

நன்றி பரணீ
நீங்கள் சொல்லவில்லையென்றால் தவறான செய்தியை வழங்கியிருப்பேன்.
இப்பொழுது திருத்திக் கொண்டேன்.