Tuesday, June 08, 2010

தொலைதூரக் கவிதைகள்

இரவின் துளிகள் வழியும்
நினைவின் சட்டங்களில்
உன் அசைவுகளின்
பலுக்கல்களாக சேர்ந்திருக்கின்றன
சொற்கள்

வரி உருப்பெறும்
ஒவ்வொரு முறையும்
உன் அசைவுகளின்
வாசிப்புகளிலும்
உன் அருகாமையின்
வடிவங்களிலும்
தங்களைத் தாங்களே
திருத்திக்கொண்டு
தீர்ந்து போகின்ற
சொற்கள்

மலட்டு முயற்சிகளில்
தூர்ந்து போய்
தொலைதூரக் கவிதைகளை
மட்டுமே
எழுதிப்போகின்றன
உன் அசைவுகளின்
பலுக்கல்களாக சேர்ந்திருக்கும்
சொற்கள்

1 comment:

Karthikeyan said...

தொலைதூரக் கவிதைகள் தொடும் தூரத்தில் கவிதையாகியிருக்கிறது.. உள்பொருள் ரசிக்க வைக்கிறது.