Wednesday, June 23, 2010

கதவு

பிரிவின் சட்டங்களைக் கொண்ட
கதவொன்று வீட்டிலிருக்கிறது
நீ நான் என்பவர்களுக்கெல்லாம்
அடைத்துக் கொள்ளும் கதவு

எல்லைகள் இல்லையென்றறிந்து
தேடித் திறக்கையில்
’தள்ளு’, ’இழு’ என்னும்
ஒட்டிகள் இல்லாமல்
ஒருபக்கமாகவே
திறந்து கொள்ளும் கதவு

1 comment:

Karthikeyan said...

பெரிய விஷயமொன்றை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். என் வீட்டிலும் இருக்கிறது ஒரு கதவு!