துணைக்கரம் பிடித்து
கால் நனைத்திருக்கிறேன்
மணல் சேகரிப்பின்
புறக்கணிப்பிற்கு
அரைக்கால் சட்டையைத்
தீர்வாக்கியிருக்கிறேன்
கால் நனைத்தவரை
ஈரம் மட்டுமே
மீண்டிருந்தது.
வளர்ச்சி விகிதங்களால்
நீந்தத் தெரியுமென்பதால்
முழுவதும் நனையலாம்.
ஆனாலும்
கடலின் ஆழமும்
நீரின் உவர்ப்பும்
உவப்பானதாயில்லை.
1 comment:
மீறி நீலவானின் தொடுதலையும்.. அலைகளின் வருடலையும் ரசிக்கவே செய்கிறது மனம்..
Post a Comment