Friday, November 11, 2005

என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் கவிதை எழுதுவார். அடிக்கடி எழுதிய கவிதைகளை என்னிடம் படிக்க கொடுப்பார். எனது விமர்சனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். சமீபத்தில் ஒரு கவிதை எழுதி என்னிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள் என்று சொன்னேன். அவருக்கிருந்த தாழ்வு மனப்பான்மையால் அனுப்பாமல் விட்டு விட்டார். வலைப்பூ நண்பர்களுக்காக அவரிடம் அந்த கவிதையைக் கேட்டு வாங்கி இங்கு ஒரு பதிவாக இடுகிறேன்.

நண்பர் திருமணமானவர். இந்த கவிதை எனக்கென்னவோ கற்பனையில் வந்ததாக படவில்லை. நீங்களும் படித்து விட்டு கருத்துக் கூறுங்கள்.

************************************
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

"எனக்கு திருமணமான பின்பும்
என்னை மனதில் வைத்துக்
கொண்டிருக்கும் காதலனுக்காக...


கோடி முறை யோசித்து
நீ எழுதிய எனக்கான காதல் கடிதம்
பத்திரமாக இருக்கிறது
மடித்து வைத்த
என் கூரைச் சேலை மத்தியில்

முப்பது பவுன் கொடுத்து
விலைக்கு வந்த வீட்டில்
மூன்றாம் ஜாமத்தில்
வாங்கியவன் அணைக்கையில்
ஞாபகம் வரும் உன் முதல் ஸ்பரிசம்

தலைசீவி பொட்டு வைக்கையில்
நினைத்துக் கொள்கிறேன்
நேசித்த நீயும் நூறு வருடம்
வாழ வேண்டுமென்று..."

இப்படியாக நீள்கிறது
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.

************************************

கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காதலன் நினைவில் வாழும் மனைவியின் அன்பான கணவன் என வித்தியாசப்பட்ட கவிதை.
படித்து முடித்து நான் கேட்ட முதல் கேள்வி "ஏன் சார் மனைவியின் டைரியைப் படிச்சீங்க?"

நீங்களே சொல்லுங்க நான் கேட்டது தப்பா?

36 comments:

ஏஜண்ட் NJ said...

//"ஏன் சார் மனைவியின் டைரியைப் படிச்சீங்க?" நீங்களே சொல்லுங்க நான் கேட்டது தப்பா? // - Ganesh.

இதற்கான பதில், நேரடியாக சரி என்றோ அல்லது தவறு என்றோ அறுதியிட்டுக் கூறமுடியாததாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.

இன்னும் இது ஏன் எப்படி என்று மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் வேண்டுமானால், உங்களுக்குத் திருமணமாயிருத்தல் அவசியம்!

;-)

b said...

கவிதை அருமை கணேஷ். உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்தினைச் சொல்லுங்கள்.

பாலராஜன்கீதா said...

கணேஷ்,

கணவன் மனைவி இருவரிடையே எந்த இரகசியமும் இல்லாதிருப்பது அவர்களின் வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும்.

தன்னைப்பற்றி தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறியிருக்கிறாரா என்று உங்கள் நண்பரைக்கேட்டு அதற்கு என்ன பதில் கூறுகிறார் என்று தெரிந்துகொள்ளுங்களேன்.
:-)

ramachandranusha(உஷா) said...

சான்சே இல்லை. இது ஒரு ஆண் எழுதிய கவிதையாதான் இருக்க முடியும் :-)

Ramya Nageswaran said...

//முப்பது பவுன் கொடுத்து
விலைக்கு வந்த வீட்டில்//

இது உண்மையாக இருந்தால், டைரி இந்நேரம் நெருப்பில் வெந்திருக்கும்.

Ganesh Gopalasubramanian said...

@ஞான்ஸ்

//உங்களுக்குத் திருமணமாயிருத்தல் அவசியம்!//
ஒரு பதிலுக்கு ஆசைப்பட்டு பாதாளத்தில் விழ நான் தயாராய் இல்லை
எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் ஞான்ஸ் :-(

@மூர்த்தி
//நண்பருக்கு எனது வாழ்த்தினைச் சொல்லுங்கள்.//
கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்.

@கீதா
//என்ன பதில் கூறுகிறார் என்று தெரிந்துகொள்ளுங்களேன்.:-)//
கேட்டுவிட்டு சொல்லுகிறேன்.

@உஷா
//சான்சே இல்லை. இது ஒரு ஆண் எழுதிய கவிதையாதான் இருக்க முடியும் :-)//
அட உங்களுக்கு முழு மதிப்பெண் கொடுக்க வேண்டும் போலிருக்கே....

@ரம்யா
//
//முப்பது பவுன் கொடுத்து
விலைக்கு வந்த வீட்டில்//

இது உண்மையாக இருந்தால், டைரி இந்நேரம் நெருப்பில் வெந்திருக்கும்.//
இல்லங்க அவங்க கூட அவங்க மாமியார் இல்லையென்று நினைக்கிறேன்.
நண்பர் ரொம்ப சாது. அதிகம் கோபப் பட மாட்டார்.
அவர் எழுதியிருப்பதை வைத்தே பாருங்களேன்.
//காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.//
காதலனாகவும் பிறக்க வேண்டுமாம். அப்படியென்றால் இப்பொழுதும் தன் மனைவியை அவர் வெறுக்கவில்லை என்று தானே அர்த்தம்.

பழூர் கார்த்தி said...

மனைவியாய் இருந்தாலும் அனுமதியின்றி அவரது டைரியை படித்திருந்தால் அது தவறே. படித்த பின்பும் கோபப் படாமல் 'அடுத்த பிறவியிலாவது அவளது (மனைவியின்) காதலானாகவும் பிறக்க' வேண்டுவது பாரட்ட வேண்டியதே. 'அன்பே சிவம்' என்று நண்பர் இங்கே கடவுளாகிறார். நம்மில் எத்தனை பேருக்கு மனைவியின் காதல் அனுபவங்களை கேட்பதற்கும், கேட்டு சந்தேகப் படாமல் மனைவியை ஆதரிக்கும் தைரியமும் இருக்கிறது? இருப்பினும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் மனைவி இன்னும் காதலனை நினைத்து வருந்தாமல் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்கலாம்.....
*****
யோவ் கணேசு..இப்படி தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுதுவதால் என் போன்றோரின் வலைப் பக்கங்களை யாரும் சீண்டுவதில்லை..போதும்யா..
போதும்.. :-)

பழூர் கார்த்தி said...

அண்ணன் கணேசு, புச்சா ஒரு பதிவு போட்ருக்கோம், வந்து படிச்சுட்டு பாராட்டி பின்னூட்டம் போடல... போட்டு தள்ளிருவோம் :-) கெட்ட வார்த்தையில திட்டாதய்யா...சும்மா ஒரு அன்புதான்(நிஜமாவே) :-)

யாத்ரீகன் said...

எல்லாருக்கும் இந்த மாதிரி சில பருவக்கவர்ச்சிகள், நிறைவேறா காதல்கள் இருக்கத்தான் செய்யும்.. ஆனால்.. இனி இருக்கு ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தியிருக்கனுமே தவிர........

அதுசரி கணேசு, அவர்கிட்ட நீங்க ஏன் கேள்வியக்கேட்டிங்க.. எவ்வளவு கஷ்டப்பட்டிருபார் (உண்மையாயிருந்தால்)...

குமரன் (Kumaran) said...

கணேஷ்...ஏனோ எனக்கு உஷா சொல்வது சரி என்று தோன்றுகிறது...இந்த கவிதை மட்டுமல்ல அந்த டைரியும் கற்பனையோ?

Anonymous said...

Good imagination both diary and poem:)

ramachandranusha(உஷா) said...

சோம்பேறி பையன் உட்பட சின்ன பசங்க எல்லாம் மெய்சிலிர்த்துப் போறாங்க. ஆனா இது ஆணோ, பெண்ணோ இந்த
ஆட்டோகிராப் கதைய சொன்னா பிரச்சனைதான். என்ன பால்ராஜ்கீதா சார் சரியா நான் சொல்லுவது :-)

Unknown said...

//ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று//

இப்பிடி ஒரு ஆணா?., அவர் போட்டாவக் முடிஞ்சாக் கொஞ்சம் போடுங்க சாமி.

பாலராஜன்கீதா said...

// ஆனா இது ஆணோ, பெண்ணோ இந்த
ஆட்டோகிராப் கதைய சொன்னா பிரச்சனைதான். என்ன பால்ராஜ்கீதா சார் சரியா நான் சொல்லுவது :-) //

உஷா,

சொன்னால் வரும் பிரச்னைகளைவிட சொல்லாவிட்டால் வரும் பிரச்னைகள்தாம் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

(திருமணம் ஆகுமுன்னமேயே என் இல்லத்தரசி என் உறவினர்தான். இருவருக்கும் பலவருடங்களாகப் (18?) பேசிப்பழக்கம். எங்களிடையே எந்தப்பிரச்னையும் இல்லை)
:-))

Ganesh Gopalasubramanian said...

@சோம்பேறி பையன்
//காதலனை நினைத்து வருந்தாமல் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்கலாம்.....//
கேட்கவேண்டியவர்கள் கண்டிப்பாக கேட்பாங்கன்னு நினைக்கிறேன். நண்பரிடம் உங்கள் கருத்தையும் சொல்லி விடுகிறேன்.

//அண்ணன் கணேசு, //
வேண்டாமே இதெல்லாம். என்னைக்கும் நான் உங்க அன்பு தம்பி தான் :-)

//போட்டு தள்ளிருவோம் :-)//
போட்டு தள்ளியாச்சு பின்னூட்டத்தை

@செந்தில்
//அதுசரி கணேசு, அவர்கிட்ட நீங்க ஏன் கேள்வியக்கேட்டிங்க.. எவ்வளவு கஷ்டப்பட்டிருபார் (உண்மையாயிருந்தால்)...//
இல்லங்க அவர் என்னையும் மதிச்சு இவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லியிருக்கார். நானும் என்னுடைய கருத்தை முழுசா சொல்லணும் இல்லையா? மனசில பட்டுச்சு உடனே கேட்டுட்டேன்

@குமரன்
//இந்த கவிதை மட்டுமல்ல அந்த டைரியும் கற்பனையோ?//
எனது முடிவுரையில் சொல்கிறேன்

@பத்மா
// Good imagination both diary and poem:)//
அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க

@கரிசக்காட்டான்
//இது நிச்சயம் கற்பனை அல்ல !!!!!என்றே எனக்குப்படுகிறது.//
ஏதேது இந்த கவிதை கற்பனையா இல்லையான்னு இன்னொரு பதிவு போடலாம் போல. என்னுடைய நட்சத்திர வார முடிவுரையில் உங்க எல்லாருக்கும் உண்மையைச் சொல்கிறேன்.

@உஷா
//ஆட்டோகிராப் கதைய சொன்னா பிரச்சனைதான். என்ன பால்ராஜ்கீதா சார் சரியா நான் சொல்லுவது :-)//
இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கா....

@அப்டிபோடு
//அவர் போட்டாவக் முடிஞ்சாக் கொஞ்சம் போடுங்க சாமி.//
அவர்கிட்ட கேட்டுட்டு அனுப்பி வைக்கிறேண்

Murali said...

Hello Ganesh

It is a real nice poem.

Murali

ramachandranusha(உஷா) said...

பால்ராஜ்கீதா சார், இங்க நாமதான் பெருசு என்பதை சொல்லாமல் விட்டுவிட்டேன். அதனால் உங்களை இழுத்தேன். இப்படி ஒரு கதையை சொல்லப் போய், வாழ்நாள் முழுதும் மனைவியின் டார்சர் தாங்காமல் அவதிப்பட்டவரைப் பார்த்திருக்கேன்.
உங்கள கதை தெரியுமே! கீதா எல்லாம் சொல்லியிருக்காங்க.
கணேஷ், பாலராஜன் கீதாவில் இருக்கும் கீதா எனக்கு நல்ல பழக்கம்.

துளசி கோபால் said...

எல்லாரும் சொல்லி முடிச்சுட்டாங்க போல. இப்ப நான் என்ன நினைக்கிறேன்னா நம்ம உஷா &பத்மா & குமரன் சொன்னதேதான். அருமையான கற்பனை!!! நண்பரை இன்னும் எழுதச் சொல்லுங்க.

'டார்ச்சர்' செஞ்ச பெண்ணைப்போலவே பெருந்தன்மைன்னு 'காட்டிக்கறதுக்கும்' ஆண்கள் இருக்காங்க.

Unknown said...

டைரி உண்மையோ கற்பனையோ அல்லது இது சாதாரணக் கவிதையா , சூப்பர் கவிதையா தெரியாது. நம்ம கவிதை ஞானம் அப்படி. ஆனால் ஒரு விவகாரமான கருத்தைக் கொண்டிருப்பதால் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடுகிறேன்.

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம்.
அதுவும் இது சுய புரிதலுடனும் சுய நினைவுடனும் ஒருவருக்கொருவர் தெரிந்தே சட்டபூர்வமாக உருவாக்கிக் கொள்ளும் பந்தம். சட்டப்படியானதும் கூட. வெளி வாழ்க்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட துணையுடன் சட்ட பூர்வமாக வாழ முடியாது. அது போல் மனதளவில் ஒன்றுக்கு மேற்பட்ட துணையை நினைத்துக் கொண்டு இருப்பதை எந்த சட்டங்களாலும் கவனிக்கவோ, தடுக்கவோ முடியாது.

//மூன்றாம் ஜாமத்தில்
வாங்கியவன் அணைக்கையில்
ஞாபகம் வரும் உன் முதல் ஸ்பரிசம்//

முன்னாள் துணையை (முன்னாள் காதலன்/காதலி அல்லது மறுமணங்களின் மூலம் வரும் முன்னாள் கணவன்/மனைவி) தற்போது உள்ள திருமணபந்தத்தின் காதல் வாழ்க்கையில் நினைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல. முன்னாள் துணையுடன் முற்றிலும் விடுபடாத நிலையில் அடுத்த துணையை ஏற்றுக் கொள்வது நல்லதல்ல. தவறானது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.

முன்னாள் துணையுடன் பேசுவதோ, பழகுவதோ, சேர்ந்து வேலைபார்ப்பதோ அல்லது ஒரு நண்பராகப் பழகுவதோ தவறே இல்லை. ஆனால் காதல் வாழ்க்கையிலும் முன்னாள் துணையை நினைத்துக் கொண்டிருப்பது தவறு.

Ganesh Gopalasubramanian said...

@பா.கீதா
//சொன்னால் வரும் பிரச்னைகளைவிட சொல்லாவிட்டால் வரும் பிரச்னைகள்தாம் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறே//
குடும்ப வாழ்க்கையில் மட்டுமா இல்லை எல்லா இடத்திலும் இதையே கடைபிடிக்கலாமா?

நன்றி முரளி

@உஷா
//பாலராஜன் கீதாவில் இருக்கும் கீதா எனக்கு நல்ல பழக்கம்.//
அதான் சார் நீங்க இருந்தா ரொம்ப கவனமா பேசறாரோ:-)
தோழியர் அட்டகாசம் எப்படியிருக்குன்னு தனிமடல்ல அனுப்புங்க பாலராஜன் சார்

//'டார்ச்சர்' செஞ்ச பெண்ணைப்போலவே பெருந்தன்மைன்னு 'காட்டிக்கறதுக்கும்' ஆண்கள் இருக்காங்க.//
ஆமாங்க நான் இத மாதிரி நிறைய ஆளுங்கள பாத்திருக்கேன்

//மூன்றாம் ஜாமத்தில் வாங்கியவன் அணைக்கையில்//
இல்ல கல்வெட்டு! இதில ரெண்டு விஷயத்தை நண்பர் சொல்றாரு. அதாவது அந்த மனைவி இன்னும் மனதளவில் திருமண வாழ்க்கைக்கு தயாராகவில்லை. இல்லைன்னா கணவனை "வாங்கியவன்"ன்னு சொல்லியிருக்க மாட்டாங்களே.

கவிதை சித்தரிப்பது காதலனை நினைத்து வாடும் திருமணமான ஒரு பெண்ணை. நம்ம மெளனராகம் படத்தில் ரேவதியினுடைய காரக்டர் போலன்னு வச்சுக்கோங்களேன்.

//ஆனால் காதல் வாழ்க்கையிலும் முன்னாள் துணையை நினைத்துக் கொண்டிருப்பது தவறு.//
இதற்கு கொஞ்சம் காலம் ஆகுமில்லையா. முடிவு சுபம் தானே மெளனராகத்திலும்

Unknown said...

//அதாவது அந்த மனைவி இன்னும் மனதளவில் திருமண வாழ்க்கைக்கு தயாராகவில்லை//
மனதளவில் தயாராகதவர் திருமணத்திற்கு ஒத்திருக்கக்கூடாது. அப்படியே பல்வேறு காரணங்களால் திருமணம் தடுக்க முடியாததாப் போய்விட்டாலும், கணவனிடம் அவரே சொல்லியிருக்க வேண்டும். நமது சமூகத்தில் இதை எல்லாம் சொல்லமுடியாது என்று சப்பைக் கட்டு கட்டுவாரேயானால், நமது சமுதாயம் அவர் தானாக செய்த காதல் வகையராக்களை இன்னும் அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. சமூகம் அங்கீகரிக்காத ஒன்றை அவர் ஏற்கனவே துணிச்சலாக செய்துள்ள படியால் இதனையும அதே துணிச்சலுடன் செய்வதே அவர் அவருக்கே உண்மையாக இருப்பது.

//இதற்கு கொஞ்சம் காலம் ஆகுமில்லையா. முடிவு சுபம் தானே மெளனராகத்திலும்//
மெளனராகத்தை வைத்து வாழ்க்கையை வாழ நினைப்பது , சக்திமான் பார்த்துவிட்டு பறக்க நினைப்பது போன்றதாகும். அப்படியே சினிமாவைத்தான் வாழ்க்கையின் உதாரணங்களாகவும், சினிமா பாத்திரங்களைத்தான் உதாரண புருஷர்களாக அவர் << அல்லது நீங்கள் :-) >> கொள்வாரேயானால் , அந்த சினிமாவில்...
கதாபாத்திரங்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் வரை "மூன்றாம் ஜாமத்தில்
வாங்கியவன் அணைக்கும்" நிகழ்சிக்கு சுயமாகத் தடை விதித்துக் கொண்டனர் என்பதாக ஞாபகம். அதுவும் காதாநாயகி, நாயகனிடம் உண்மையைத் தானே சொன்னதாகவும் ஞாபகம். எந்த டைரியும் மறைப்பும் அவர்களின் பாத்திரத்தில் இல்லை.

rv said...

கணேசரே,
இந்தப் பதிவை வழிமொழிகிறேன்
----

இதைத்தவிர வேறெதுவும் தோணல :(

நாமெல்லாம் பாச்சிலர் கோஷ்டியாச்சே.. ஆழமின்னா அது என்னன்னு கேக்கறது நம்ம பழக்கமில்லியா?

சிங். செயகுமார். said...

கவிதை அருமைங்க நண்பர கேட்டதா சொல்லுஙக
புருஷனும் பொண்டட்டியும் திறந்த புத்தகமா இருந்துட்டா எவ்ளோ சந்தொஷம் பாருங்க!
கணேஷ் பிரண்ட் கொடுத்து வச்சவர்தான்.
ஆமா உஷாவுக்கும் ரம்யாவுக்கும் இதுல உடன் பாடே இல்ல?
ஏங்க ஆம்பளைக்கி மட்டும்தான் ஆட்டோகிராப்பா?
-நீங்க காதல் படம் பாக்கலைன்னு நெனைக்கிறேன்

Anonymous said...

கவிதை அருமை! பெரும்பாலான கவிதைகள் நிகழ்வுகளின் தாக்கங்கள் தான்! ஆனால் கவிதை உண்மையிலேயே மெய்யா, பொய்யா என்ற ஆராய்ச்சி அவசியம் தேவையா?

அப்பால நா இன்னா சொல்ல வரன்னா, அது பொன்னான்ட மட்டும் வர்ர பீலிங்ஸ் இல்ல நைனா.4 தடவை பொன்னுங்க மாரனா கூட, பஸ்டு பொன்னு மாதிரி எதுவுமே அமயல நைனா...அதுனால தான் சொல்ரென் இப்பொ இருக்கரது தொட்டுச்சினா கூட எனக்கு "அவ" நெனப்பு தான்! :'(

நளாயினி said...

அச்சாசாசாக்க் கவிதை. கவிதையை எழுதியவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவியுங்கள்.

NambikkaiRAMA said...

//என் மனைவியின்டைரிக் குறிப்பு//

தலைப்பை பார்த்த்தும் அட நம்ம கணேஷ்க்கு கல்யாணம் எப்ப ஆய்ச்சு? சொல்லவேயில்லைன்னு வந்து பார்த்தா :))

Ramya Nageswaran said...

எனக்கு உடன்பாடு இல்லைன்னு அர்த்தம் வர்ற மாதிரியா இருக்கு? அப்படிச் சொல்ல வரலை...இதைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கேன் (ஏற்றிடலாமா வலையிலே??).

ramachandranusha(உஷா) said...

//மெளனராகத்தை வைத்து வாழ்க்கையை வாழ நினைப்பது , சக்திமான் பார்த்துவிட்டு பறக்க நினைப்பது போன்றதாகும்//
கல்வெட்டு !சூப்பர்.. கடைசி சீனில் கட்டிபிடித்துக் கொண்டவுடன் சினிமாவில் சுபம் போட்டு விடுவார்கள். ஆனால் வாழ்க்கை? அப்பொழுது
தானே ஆரம்பிக்கிறது? என்றாவது ஒரு சொல் வந்தால் தாங்க முடியுமா? ஊவா முள்ளாய் உறுத்திக் கொண்டுதானே இருக்கும்?
சொல்லாமலும், அதை மறந்துவிட்டு மனைவி/ கணவனுடன் புது வாழ்வு தொடங்குவதே உத்தமம். அப்படி தெய்வீக காதலாய் இருந்தால், ஏன் கல்யாணம் செய்துக் கொண்டு இன்னொருவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டும்? மெளனராகம் மோகன் மாதிரி "நிலாவே வா" என்று ஸ்லோ மோஷனில் யாருப்பா பாடிக்கிட்டு இருப்பாங்க?

ஜெயகுமார், ஆட்டோகிராப்பா? நானா? எனக்கும் காதலுக்கும், கவிதைக்கும் ஏழாம் பொருத்தம்.

கணேஷ், பாலராஜன்கீதா, தன் மனைவி கீதாவை அறிமுகம் செய்துவைத்தவுடன் அவரை கழட்டிவிட்டு விட்டு பேசினோம்,பேசினோம் பேசிக் கொண்டே இருந்தோம் :-)

பத்மா அர்விந்த் said...

கனேஷ்
கணவன் அத்தனைதூரம் மனைவியிடம் அனுபு செலுத்துபனாக இருந்தால், அதை இன்னொருவனிடம் காட்டமாட்டான். அதனால்தான் அப்படி சொன்னேன்

தாணு said...

கணேஷ்
அந்த கவிதை கற்பனையாக இல்லாத பட்சத்தில், அது ஏன் உங்க நண்பரோட கதையாகவே இருக்கக்கூடாது. தண் நிலைமையை மனைவியின் டைரிக் குரிப்பாக எழுதியிருக்கலாம் என்பதே என் கருத்து. தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அளவு பிறரின் உணர்ச்சிகளை இத்தனை நெருக்கமாக விளக்க முடியாது. இது னிச்சயன் உங்கள் நண்பரின் முதல் காதல் தாக்கமாகத்தான் இருக்கும், நோண்டிப் பாருங்க.

முதல் காதலும், முதல் முத்தமும், எல்லார் மனதிலும் நீறு பூத்துதான் இருக்கும். நிகழ்காலம் தோல்வி காட்ட ஆரம்பிக்கும்போது, கடந்த காலம் பீறிட்டு வந்துவிடும்.

Ganesh Gopalasubramanian said...

@கல்வெட்டு
//நமது சமுதாயம் அவர் தானாக செய்த காதல் வகையராக்களை இன்னும் அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. சமூகம் அங்கீகரிக்காத ஒன்றை அவர் ஏற்கனவே துணிச்சலாக செய்துள்ள படியால் இதனையும அதே துணிச்சலுடன் செய்வதே அவர் அவருக்கே உண்மையாக இருப்பது.//
புரியலையே... சமூகம் அவர் காதலை அங்கீகரிக்காததால் தான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் அதே போல் திரும்பவும் சமூகம் அங்கீகரிக்காததால் உண்மையைச் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறார். இதில் அவர் நிலைப்பாடு ஒன்றாகத்தான் இருக்கிறது.

//அது போல் மனதளவில் ஒன்றுக்கு மேற்பட்ட துணையை நினைத்துக் கொண்டு இருப்பதை எந்த சட்டங்களாலும் கவனிக்கவோ, தடுக்கவோ முடியாது.//
இதில் நான் உங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன்.

//நாயகனிடம் உண்மையைத் தானே சொன்னதாகவும் ஞாபகம். எந்த டைரியும் மறைப்பும் அவர்களின் பாத்திரத்தில் இல்லை.//
எல்லோரும் இவ்வளவு தெளிவாக இருப்பதில்லைதானே. அங்காங்கே இது போல் விஷயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு தீர்வாக நாம் என்ன சொல்கிறோம் என்பதே முக்கியம்.

@இராமநாதன்
//நாமெல்லாம் பாச்சிலர் கோஷ்டியாச்சே.. ஆழமின்னா அது என்னன்னு கேக்கறது நம்ம பழக்கமில்லியா?//
அது ரொம்ப டீப்பப்பா.... இப்போதைக்கு அவ்வளவு டீப்பா போக வேண்டாம்... நீங்க தப்பிச்சிட்டீங்க நான் மாட்டிகிட்டேன்

@சிங். செயகுமார்.
//ஏங்க ஆம்பளைக்கி மட்டும்தான் ஆட்டோகிராப்பா?
-நீங்க காதல் படம் பாக்கலைன்னு நெனைக்கிறேன்//
வேண்டாங்க இப்படிப்பட்ட ஆட்டோகிராஃப்கள் வேண்டவே வேண்டாம் இதில ஆண் பெண் என்ற வித்தியாசமெல்லாம் தேவையேயில்லை. கவிதைக்கு வந்த கேள்விகளும் பதில்களும் பார்த்தீங்க இல்லையா... அப்படீன்னா நிஜ வாழ்க்கையில எத்தனை கேள்விகள் எத்தனை குழப்பங்கள் இருக்கும்

@அனானி
//கவிதை அருமை//
நன்றி

//எனது பாராட்டுக்களை தெரிவியுங்கள்.//
நன்றி நளாயினி

//சொல்லவேயில்லைன்னு வந்து பார்த்தா :))//
அதென்னங்க எல்லாரும் என்னை மட்டும் குறி வச்சிட்டே இருக்கீங்க... ஆள விடுங்க சாமி

//மெளனராகத்தை வைத்து வாழ்க்கையை வாழ நினைப்பது , சக்திமான் பார்த்துவிட்டு பறக்க நினைப்பது போன்றதாகும்//
அட என்னங்க இது நான் சொன்ன உதாரணம் .... அதுக்கு நீங்களும் இன்னொரு உதாரணம் சொன்னா எப்படி...

//"நிலாவே வா" என்று ஸ்லோ மோஷனில் யாருப்பா பாடிக்கிட்டு இருப்பாங்க?//
இப்படி வேற பாடணுமா... நண்பர் பாவங்க

//காதலுக்கும், கவிதைக்கும் ஏழாம் பொருத்தம்.//
சே சே ஒரு வெண்ணிலா ஒரு குட்டி ரேவதி ஒரு தாமரை யாராவது ஒருத்தர் கிடைச்சிருப்பாங்க... இப்படி மனச கல்லா வச்சுகிட்டீங்களே

//பேசினோம் பேசிக் கொண்டே இருந்தோம் :-)//
சமயம் பார்த்து அடிக்கறதுங்கறது இது தானோ... அன்னைக்கு அமைதியானவர் தான் இப்போ வரைக்கும் சரியாவே பேச மாட்டேங்கிறார். பின்னூட்டமிட்டாக்கூட அடக்கியே வாசிக்கிறார்

//அவர் உங்களிடம் அதை காட்டியதே தவறு என்பேன்.//
ராஜ்... பிராக்டிகலா பார்த்தால் அதுதான் நடந்திருக்கணும்... மற்றதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் :-0)

//அதனால்தான் அப்படி சொன்னேன்//
சரியா சிந்திச்சிருக்கீங்க... ராஜ் சாருக்கு அளித்த பின்னூட்டப் பதில் தான் உங்களுக்கும்.. :-)

//தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அளவு பிறரின் உணர்ச்சிகளை இத்தனை நெருக்கமாக விளக்க முடியாது.//
தாணு!!!
இருக்கலாம் ஆனால் இதில் இரண்டு பேரின் வாழ்க்கைக் கண்ணொட்டம் இருக்கு அதெப்படி ஒருத்தரால முடிஞ்சதுன்னு தான் எனக்கு தெரியல... இத எழுதினது ஒருத்தர் தான்.. இது தான் உங்களுக்கு க்ளு

Bobby said...

மனதை மிகவும் தொட்டு விட்டது.
இப்போதுதான் வலை பதிய ஆரம்பித்திருக்கின்றேன்.
எனது பக்கத்தையும் சற்று புரட்டிப்பார்த்தால் மகிழ்ந்து போவேன்.

முத்துகுமரன் said...

கணேஷ் இந்த கவிதை உண்மையை வைத்து எழுதப்பட்டதா என்பதை உங்கள் நண்பர் மட்டுமே கூற முடியும் என்றாலும் நான் வாசித்த மிக மென்மையான உணர்வுகளை சொன்ன கவிதை இது....

ஒரு வேளை இது உண்மை சம்பவத்தை வைத்து எழுதப்பட்டதாக இருந்தால் உங்கள் நண்பருக்கும் அவரது துணைவியாருக்கும் எனது வாழ்த்துகள்...

இதிலிலுள்ள ஒரு வரி அவர்களுடைய அன்யோன்யத்தை அழகாக சொல்லிவிட்டுப் போயிருக்கிறது. அவர்களுக்குள் ஒளிவு மறைவு இல்லை என்பதையும்தான்.

அந்த வார்த்தை - காதலனாகவும்

கவனிக்கவும் காதலனாக இல்லை......

அன்புடன்
முத்துகுமரன்

கயல்விழி said...

அந்தரங்கங்கள் ரகசியமானவை டயறி யாருப்பா படிக்கச்சொன்னது??
இது வெறும் கற்பனை என்று தான் எண்ணத்தோன்றுகிறது. ரகசியங்கள் டயறியில் பதிப்படமாட்டாது.

G.Ragavan said...

கொஞ்சம் லேட்டா வந்தேன். எனக்கு முன்னாடி எல்லாரும் முந்திக்கிட்டாங்க. சரி. எல்லாரும் சொன்னதையெல்லாம் ஒன்னாக் கலக்கி ஒரு நூறு கிராம் எடுத்துக்கோங்க. அதுதான் நான் சொல்ல வந்த கருத்து. உங்களுக்கு அது புரியலைன்னா...சரியாக் கலக்கீருக்கீங்கன்ன பொருள். ஹி ஹி.

enRenRum-anbudan.BALA said...

கணேஷ்,
நண்பருக்கு என் வாழ்த்துக்கள் !!! உங்களுக்கும் தான், சென்ற வாரம் ஒரு நட்சத்திர கலக்கு கலக்கியதற்கு !!
என்றென்றும் அன்புடன்
பாலா