ஏக்கப் பார்வையுடன் கூடிய
பதற்ற அசைவுகளுடன்
பிரிவின் கணங்கள் பொருந்திய
வார்த்தைத் தெறிப்புக்களை
இருவருக்கான இடைவெளியெங்கும்
இட்டுச் செல்கிறாய் நீ
விழித்திரை விலகும்
காட்சிகளின் இழப்பு
தீர்க்கவியலா புதிரொன்றை
ஒப்புமைக்கான தலையசைவாகவும்
வியப்பு, இயலாமை, புரிதலுக்கான
உதடு குவிப்புகளாகவும்
நீட்டித்துச் செல்கிறது
கணங்களைக் கைப்பற்ற
முடியாத கடிகாரமொன்று
பத்து பத்திலேயே
நின்று கொண்டிருக்கிறது.
4 comments:
//கணங்களைக் கைப்பற்ற
முடியாத கடிகாரமொன்று
பத்து பத்திலேயே
நின்று கொண்டிருக்கிறது.
//
அருமை தொடர்ந்து எழுதுங்கள்
கணங்கள் நிறைந்த கணங்கள்...
ரொம்ப பிடிச்சிருக்கு கணேஷ்.
ஜீவி...பாரா சார்.. கார்த்திகேயன்... எல்லோருக்கும் நன்றி.
பாரா சார்... ஆவியா அடிக்கடி பாக்க முடியுதே உங்கள ? ;)
Post a Comment