பிரம்மனுக்கு சல்யூட்டும்
அடித்தாயிற்று
பெண்களைப் படைத்ததற்க்காய்.
அந்த அழகியல் இடஒதுக்கீடு
மட்டும் இன்றளவும்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது
எல்லா ஆண்களாலும்
முழுமையாக 100%
"காதலிக்கு மட்டும்"
போர்டு போடாமல்
ஓட்டிவந்த வாகனுமும்
மனைவியானபின் ஒதுக்குகிறது.
இன்றுவரை புரியவில்லை
இந்த பின்சீட் மர்மம்.
வெளியூரிலிருக்கும் மனைவிக்கு
கடிதம் எழுதமுடிவதில்லை
ஒருவேளை காதலிக்காய்
எழுதி எழுதி
வார்த்தைகள்
தீர்ந்துபோயிருக்கலாம்
முகம் புதைத்து
அழுதுவிடும் துணிவும்கூட
மூடப்பட்டுவிடுகிறது
ஆதிக்கப்போர்வைக்குள்,
இருண்டு போகும்
பார்வையை அறியாமல்
விளக்கணைத்துவிட்டு
வெளிச்சத்தைத் தொலைத்துவிட்டு
இரவில் மட்டும் மனைவியைத் தேடுகிறான்
கிடைக்கமாட்டாள் என்று
தெரியாமலேயே
2 comments:
ஏதோ குறைந்த மாதிரி தெரிகிறது!
படிமம் வெளிப்படவில்லை!
மணிகண்டன்! நீங்கள் சொல்வது சரிதான் மீண்டும் ஒருமுறை படிக்கையில் எனக்கும்
தோன்றுகிறது சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று.
நன்றி அடுத்த பதிவில் இன்னும் நன்றாக சொல்ல முயல்கிறேன்
Post a Comment