கவிதைகள் எழுதப்படுகின்றன.
ஒருவன் வாசிக்கிறான்.
ஒருவன் சிரிக்கிறான்.
ஒருவன் வசிக்கிறான்.
பலர் பார்க்கிறார்கள்.
புரியாதவர்களில் சிலர் கேட்கிறார்கள்.
புரிந்தவர்களில் சிலர் சொல்கிறார்கள்.
பலருக்கும் ஒன்றும் புரிவதில்லை.
எவனுக்கு புரியும் எவனுக்கு புரியாது
என்பது எழுதியவனுக்கு மட்டுமே
புரிகிறது.
1 comment:
வாழ்த்துக்கள்..... உங்கள் எழுத்தின் ஆழத்தை ரசித்தேன்.
Post a Comment