என் கேள்விகளை
நீ கேட்கும் போது வியக்கிறேன்!
எப்படி கேள்விகள்
கேள்விகளாகவே
சென்று சேர்ந்தன என்று?
என் கேள்விகள் உன்னை
வந்தடைந்திருக்கலாம்
பெருத்த வாகனமொன்றில்
வளைந்த பாதைகளில்
விரைந்து பிராயணிக்கையில்
வேலிகள் மறைக்கும்
மந்தைச் செடிகளின்
மருகும் முனகலில்
நெருப்பு, விளக்குகளின்
வெளிச்சம் மறைத்து
இரைக்கும் வெப்பத்தில்
தந்திக்களின் நொடிகளாக
நுரைத்து வழியும்
நரம்புகளின் அதிர்வுகளில்
ஒரு நீர்க்குமிழியின்
மேலிடை பிம்பங்களில்
ஆழ்ந்த விசாரணையில்
வரிசை எறும்புகளின்
இருப்பறியாமல்
பூட்டப்படும்
கருப்பு பெட்டிகளில்
முழுமனதில்லாமல் எடுக்கப்பட்டு
நீட்சிகளாய் நீடிக்கும்
முந்திப்போன முடிவுகளில்.
என் கேள்விகளும் என்னை
வந்தடைந்தனவே.
என் கேள்விகளில் துவங்கி
என் கேள்விகளிலேயே
முடிந்து விடுகிறது
உனக்கும் எனக்குமான உறவு.
உரையாடல் கவிதைப் போட்டிக்காக.
5 comments:
கவிதை நன்று..வெற்றி பெற வாழ்த்துக்கள்..
நல்ல சொல்லாடல். வெற்றி பெற வாழ்த்துகள்.
-ப்ரியமுடன்
சேரல்
அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
//வரிசை எறும்புகளின்
இருப்பறியாமல்
பூட்டப்படும்
கருப்பு பெட்டிகளில்//
அற்புதமான வர்ணனைகள்.... கவிதை நன்றாக இருக்கிறது நண்பரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
Post a Comment