வீட்டிற்கு தெரியாமல்
பத்தாம் வகுப்பில்
பார்த்த நீலப்படமும்
காயத்ரி என்பவளுக்காய்
எழுதிய காதல் கடிதமும்
எதிர்வீட்டுக் கண்மணிக்கான
சன்னலோரத்து சமிக்ஞைகளும்
கீழடித்து கவனமாய்
திறந்த குவாட்டர் பாட்டிலும்
அடிக்கடி தெரிகின்றன பத்தாம் ஐந்தாம் வகுப்பு மகனின் முகத்தில்.
2 comments:
குட்டி பதினாறடி பாயும் தானே! ;)
நன்றி கண்ணன்... தலைப்பையும் கூடவே வரிகளையும் மாற்றிய பிறகு இன்னும் அழகாக தெரிகிறதெனக்கு!
Post a Comment