உயிர்களே உயிர் வாங்கும்
உயர்தர விற்பனைக்கூடம்
ஐந்தறிவு ஆறறிவால்
அழிக்கப்படும் குருசேத்திரம்
கடைசி ஆசை கேட்காமலேயே
உயிரெடுக்கும் சிறைச்சாலை
உயிர்கொலை செய்து பணப்பிச்சை
எடுக்கும் - இடுகாடு
மனிதத் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு
நடத்தும் ஆடுகளின் - பாராளுமன்றம்
ஆறுக்கு ஆறில் (6 X 6) செய்யப்படும்
அமெரிக்க ஆதிக்கம்
அஃறிணை அகிம்சை அடக்கப்படும்
ஜாலியன் வாலா பாக்
சிசுக்கொலை - சிக்கன் 65
ஆகும் நவீன உசிலம்பட்டி
"வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை"
- சட்டம் நிறைவேற்றும் சட்டமன்றம்
No comments:
Post a Comment