Wednesday, March 02, 2005

நிழல்கள்

உன்னை அறியாமல் - நீயே
எழுதும் உன்னத
காவியங்கள்

உன் காலடி கோலத்தில் - உன்னை
உன்னுடனே இணைக்கும்
ஒற்றுபுள்ளிகள்

பூமிச் சுவரில் - சூரியக்
கதிர்களால் வரையப்படும் - உன்
சித்திரங்கள்

உன்னை இழக்கவில்லை - என்று
உனக்கே உணர்த்தும்
அற்புதங்கள்

தார் சாலைகளின்
கருமையுடன் போட்டியிடும்
கரும்புள்ளிகள்

பூமி படுக்கையில் -
எப்பொழுதும் துயிலுறங்கும்
கும்பகர்ணன்கள்

யாருமில்லா வேளையில் - நீ
உறவாட உனக்கான
ஓருயிர்

ஆறடியை ஈறடிகளிலும்
அடக்கிடும் அதிசயக்
கடவுள்

No comments: