புத்தகப் பொதியில்
கழுதையாகிப் போகிறேன்
பொதியின் சுமையில்
ஐந்தில் வளைகிறேன்
கல்விச் சிறையில்
கம்பி எண்ணுகிறேன்
அறிவினை வளர்க்க
மனதால் தேய்கிறேன்
எனக்கும் வேண்டும்
தெருவோர புழுதி
முழங்கையில் காயம்
அப்பாவிடம் அடி
எனக்கும் வேண்டும்
மரக்கிளையில் ஊஞ்சல்
ஆக்கர் பம்பரம்
கல்லெறிந்த மாங்காய்
எனக்கும் வேண்டும்
வருங்காலத்தில் நினைக்க
பசுமையான கடந்தகாலம்!
கொடுத்து உதவுங்கள்
No comments:
Post a Comment