Tuesday, March 08, 2005

பெண்கள்

தாயின் முதல் முத்தம்
காதலியின் முதல் பார்வை
மனைவியின் முதல் மொழி
இவைகளின் நினைவுகளில்
எதற்க்கு முதலிடம்?

இமையோரத்து நீர்த்துளிகள்
கண்ணிமைக்கும் வினாடிகளில்
துடைக்கப் படுகின்றன மூவரில்
யாரோ ஒருவரால்!
யாருக்கு முதலிடம்?

என்னை சுமப்பதில்
மூவருக்குமே கடும் போட்டி.
கடைசிவரை இவர்களின் கருணைக்கு
சுமையாகிப் போகிறேன்.
யார் சுமப்பது அதிக பாரம்?

என்னைச் செய்வதில்
இவர்கள் உருக்குலைந்து
சிதைந்து போகிறார்கள்
யாருக்கு அழிவு அதிகம்?

கேள்விகளை மூவரின்
முன்னும் வைக்கிறேன். மூவருமே
சிரிக்கிறார்கள் என்னைப்
புரிந்தவராய்! எனக்கு மட்டும்
புரியாமல் போன என்னை!

ஆணாக பிறந்ததில்
பெருமைப் படுகிறேன்!
பெண்களால் வாழ்க்கைப்
பெறுவதால்.

- மகளிர் தினம் - 2005க்காக
தோழியர் மன்னிக்க!

1 comment:

Chandravathanaa said...

யாருக்கு முதலிடம்...?
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை.
தாய்க்கு இணையாக யாருமில்லை.
தாயின் அன்பை யாராலும் தர முடியாது.
கருவில் சுமந்த தாயின் ஸ்தானம் எவருக்கும் கிடைக்காது.
தாயின் அன்பில் துளியும் சுயநலம் இல்லை.
ஆனாலும் ஒரு மனிதன் கூடுதலாகக் கடமைப் படுவது மனைவியிடம்தான்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவள்ää மனைவி என்ற ஸ்தானத்துக்கு வந்ததும்
கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள்ää காட்டும் அன்பு.... தேற்றும் பரிவு.. இத்தனைக்கும் மேலால் கணவனின் சினப்பு.. கோபம்.. தகிப்பு.. எல்லாவற்றையும் தாங்கி அவனையும் தாங்கி(கணவன் மனைவியைத் தாங்கவில்லையா என்று கேட்காதீர்கள. ஒரு மனைவி போல தாங்குமளவுக்கு இன்னும் கணவன்கள் இல்லை)அவனது குழந்தைகளுக்கும் தாயாக.......
இந்தக் கடன்களை தீர்ப்பது என்பது ஆண்களால் முடியாதது.