சுண்டல் விற்கும் சிறுவனின்
சூறாவளி சுறுசுறுப்பு
கரையில் ஒதுங்கும்
அரிய வலம்புரி சங்கு
மிதித்தாலும் மீண்டும் தீண்டும்
காலடி அலைகள்
தூரத்தில் கேட்கும்
கோயிலின் மணியோசை
காதினில் தேன்பாய்ச்சும்
மீனவரின் ஏலேலோ
சொல்லாமல் வருடிப்போகும்
மாலைக் காற்று
சில ஜோடிகள் விட்டுச்செல்லும்
காலடிச் சுவடுகள்
மணற்பூவில் ஊறியெழும்
வண்டெனும் நண்டு
எதையும் ரசிக்கமுடியவில்லை
அருகில் என்னவள் !
3 comments:
அருமை கண்ணா அருமை :-))
காதலியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இத்தனையையும் ரசித்திருக்கிறீர்கள் என்றால் உண்மையிலேயே பெரிய ரசிகனய்யா நீர்
அருமை
நன்றி ஹரி
Post a Comment