சமீபத்தில் ஆந்திர அரசு, சுயஉதவிக்குழுக்கள் மாநில அரசிடமிருந்து பெற்ற கடனுக்கு செலுத்தும் வட்டித் தொகையை மானியப்படுத்துவதாக அறிவித்தது. இதன் மூலம் எப்பொழுது வட்டித்தொகை (ஒன்பது சதவிகித வட்டி) செலுத்தப்படுகிறதோ அப்பொழுது அந்தத் தொகையிலிருந்து ஆறு சதவிகிதத்தை செலுத்துபவரிடமே திருப்பித் தர மசோதா நிறைவேற்றப்பட்டது. கொஞ்ச நாளிலேயே மேலும் ஒரு மாற்றம் செய்யத் தயாராகிறது. இம்மாற்றத்தின் மூலம் வட்டி செலுத்துபவர் நேரடியாக மூன்று சதவிகித வட்டியைச் செலுத்தினால் போதும். இதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பினை அரசு மானியமாக ஏற்று ஈடுகட்டும்.
இந்த மசோதா பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசு ஒரு சாரருக்கு மிகப்பெரிய சலுகைகளைத் தருவதாக சிலர் போராட்டத்திலும் குதித்துள்ளனர். உண்மை நிலையை ஆராய்ந்தால், அது ஒரு விதமாக இருக்கிறது. இந்த மசோதா மூலம் சுய உதவிக்குழுக்கள் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு பொருளினை வாங்கி அதை ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு விற்றால் அவர்களுக்கு சுமார் நூறு ரூபாய் லாபம் கிடைக்கும். (பத்து சதவிகித வட்டி நூறு ரூபாய்). இப்படி பார்த்தால் வாங்கி விற்பதின் மூலமாகவே இவர்கள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். இந்த மசோதா வருங்காலத்தில் திருத்தப்படுமானால் அதற்குள்ளாக இவர்கள் அதிக அளவில் லாபம் ஈட்டியிருக்க முடியும்.
இது ஒருபுறமென்றால் வணிகர்களிடம் இதைப் பற்றி கேட்டால், அவர்களின் கோணம் வேறு மாதிரியாக இருக்கிறது. இம்மசோதா மூலம் சுய உதவிக்குழுக்களில் தனியாரின் முதலீடு பெருமளவு குறையும் என்றும், போலி சுய உதவிக்குழுக்கள் அதிகமாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் சாதாரண வியாபாரிகளும் தங்களின் வியாபாரத்திற்கு பெருமளவு சுய உதவிக்குழுக்களையே நாடுவார்கள். இதன் மூலம் அரசுக்கு மேலும் வருவாய் இழப்பு ஏற்படும். சுய உதவிக்குழுக்களும் தங்களின் உறுப்பினரின் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் மேலும் சுரண்ட வாய்ப்புள்ளது. இப்படியாக பல பிரச்சனைகளை இம்மசோதா கிளப்பியுள்ளது.
ஆந்திர முதல்வர் தமது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது போல் சுய உதவிக்குழுக்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறார் என்றாலும் அது அரசின் வருவாய் இழப்பிற்க்கு மட்டுமல்லாமல் ஏனைய வணிகர்களின் வருவாய் இழப்பிற்க்கும் காரணமாகிறது. இதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக கட்டிடங்களாகவோ பயிற்சிகளாகவோ தமது நேசக்கரத்தை நீட்டலாம். ஆந்திர அரசு பரிசீலிக்குமா?
- "பிசினஸ் வேர்ல்டு" லிருந்து
1 comment:
உண்மை தான், ஓட்டு அரசியல் செய்தே இந்த அரசியல்வதிகள் நமது பொருளாதாரதை கெடுட்துக்கொண்டிருகிரார்கள். என்றுதான் இவர்களிடமிருந்து நமக்கு விடிவுகிடைக்குமோ............
Post a Comment