நேற்று கடைவீதியில் சில பொருட்கள் வாங்க சென்றேன். அப்பொழுது இரண்டு இளவட்டங்கள் (கண்டிப்பாக காதலர்கள்தான்) ஒரு மிரிண்டாவை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த பூங்காவில் சென்று அமர்ந்து கொண்டனர். நமக்கு வாய்க்காதது அடுத்தவனுக்கு வாய்த்தால் நமக்குத் தான் பொறுக்காதே, நானும் உடனே ஒரு லிம்காவை வாங்கிக் கொண்டு அவர்கள் பார்க்க முடியாத ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு அவர்களை நோட்டம் விட்டேன். (திட்டாதீங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே).
இருவரும் ஆளுக்கொரு ஸ்டிரா வைத்திருந்தனர். வழக்கம் போல் இருவரும் மிரிண்டாவைப் பருக ஆரம்பித்தனர். தலையை தெரியாமல் (தெரிஞ்சே கூட இருக்கலாம்) மோதிக் கொள்வதும். கொம்பு முளைக்கக் கூடாதென்று மறுபடி மோதிக் கொள்வதும், வழக்கமான காதல் காட்சி. மிரிண்டாவின் அளவு மட்டும் ஆமை வேகத்தில் குறைந்து கொண்டிருந்தது. சொல்லும் படியாக அவர்களுக்குள் வேறொன்றும் நடக்கவில்லை.
ஆனால் நமக்குத் தான் கண் சும்மாயிருக்காதே. ஒரு 360 டிகிரி உட்கார்ந்தவாறே சுற்ற விட்டேன். சற்றுத் தொலைவில் ஒரு தம்பதியினர். இந்த தடவையும் மிரிண்டா, ஆனால் ஒரே ஸ்டிரா. மிரிண்டாவின் அளவை வைத்து பார்த்தால் அவர்களும் அப்பொழுது தான் வந்திருக்க வேண்டும். கணவன் மிரிண்டாவை ஒரு சிப் உறிஞ்சி விட்டு மனைவியிடம் தருகிறான். மனைவி யதேச்சையாக ஸ்டிராவினை கையில் எடுத்து விட்டு வெறுமனே குடிக்கப் போகிறாள். கணவன் தடுக்கிறான், ஸ்டிரா மூலம் குடிக்கச் சொல்கிறான். இருவருக்கும் இடையில் புன்னகை பரிமாற்றம் (காதல் பரிமாற்றம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்). மிரிண்டாவை குடித்து முடித்து விட்டு இருவரும் (தம்பதியினர்) நடக்க ஆரம்பித்தனர்.
மீண்டும் நான் அந்தக் காதலர்கள் பக்கம் திரும்பினேன், (ஓசியில ரெண்டு சினிமா கேட்குதான்னு நீங்க முனங்கிறது எனக்கு புரியுது) மிரிண்டா இன்னும் மிச்சமிருந்தது. மீண்டும் தலை மோதல், புன்னகை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன், திருமணம் முடிந்த பின்பு காதல் செய்வதில் பக்குவம் இருந்தது, புரிதலும் இருந்தது. திருமணத்திற்கு முன்பு இருக்கும் காதலில் காதல் மட்டும் தான் இருக்கிறது, நிதர்சனம், சுயநினைவு எல்லாம் மறைக்கப் பட்டு விடுகிறது.
***************
இந்நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகு ஒரு ஹைக்கூ ஞாபகத்திற்கு வந்தது
திருமணத்திற்கு முன் -
ஒரு மிரிண்டா இரண்டு ஸ்டிரா
காதல் அல்ல காசில்லாமை
திருமணத்திற்குப் பின் -
ஒரு லிம்கா ஒரே ஸ்டிரா
காதல் மட்டுமல்ல காவியம்
16 comments:
ஹே!ரொம்ப நல்லாருக்கு.
-முரசு
சார் இளநீர் குடிச்சு பார்க்கச் சொல்லுங்க இன்னும் நல்லா இருக்கும்
புரிதலும் பகிர்தலும் தான் காதல்.. நல்லா சொன்னீங்க
நம்மாளுங்க இனிமேல் மிரிண்டாவும் கையுமாத் தான் அலையப் போறாங்க...
ஒரு விஷயம் எப்ப பார்த்தாலும் காதலர்கள நோட்டம் விடறவங்கள என்ன செய்யலாம்??
கணேஷ் கோவில்பட்டியிலயா நடந்தது இது. நம்பமுடியலை. அப்புறம் நீங்க NEC யா?
ஆமா.. உங்க லிம்காவ என்ன பண்ணீங்க?
பறக்கறது எல்லாம் ஒருநாள் தரைக்கு இறங்கிதான் ஆகணும். பறக்கற சுகத்துல கீழ நடக்கற நிஜம் தெரியறதில்லை. கீழ வந்தப்பறம் பறந்தது நெஜமாலுமே சுகமான்னு தெரியறதில்லை.. ஆஹா... தத்துவமுத்துடா இளவஞ்சி! :)
நான்கூட இதைபத்தி ஒரு பதிவு எழுதியிருக்கென். வேற கோணத்தில். நேரம் கிடைச்சா படிங்க...
http://ilavanji.blogspot.com/2005/03/blog-post_09.html
இளநீரா !! கண்டிப்பா எனக்கு யாராவது மாட்டினா வாங்கி தருகிறேன் சார் !
சார் எப்ப பார்த்தாலும் காதலர்களை நோட்டம் விடலை.. இது சத்தியமா தற்செயலா நடந்தது.
கோவில்பட்டியில நடந்ததுன்னு சொன்னா நம்ப மாட்டீங்களா??
கிறுக்கன் சார்! நான் 100% அக்மார்க் NEC மாணவன்... நீங்களும் NEC_யா.... அப்படி இருப்பின் நம்ம உரையாடலைத் தனி மடலில் வைத்துக் கொள்வோம். நிறைய பேச வேண்டியிருக்கிறது.
இளவஞ்சி சார்! என்னோட லிம்கா அப்ப்டியே இருக்கு சார் ... ஸ்டிராவும் ரெண்டு எடுத்து வச்சிருக்கேன்... எனக்கும் யாராவது கிடைக்காமாட்டாங்களா என்ன??
NEC கும்பல் நிறைய இருக்கும் போலகிடக்க.... நானும் NEC-ல குடு குடு மாணவனப்பா.... NEC-க்குன்னே தனியா பதிவு போடனும் போலகிடக்க...
சரி சரி வடுங்க
yes ganesh. Me too NEC ian. Surprised to know Halwacity is also NECian. Hope many more NEC ians are blogging.
ஏம்பா கோவில்பட்டியில படிச்சவங்க எல்லாம் ஒரே மாதிரி தான் கடலைமிட்டாய் பண்ணீவீங்க போல. என்னுடைய பழைய பதிவு ஒன்னை பாருங்க. சில சாயல் இருக்கும்
http://halwacity.blogspot.com/2004/12/blog-post_16.html
கிறுக்கன் அண்ணே! அங்கங்கே பாய்ஞ்சி பாய்ஞ்சி உண்மை சொரூபத்தை காட்டுங்கள் என்று பின்னூட்டமிடும் போதே நினைச்சேன். என்.இ.சி யா? ஆமா அங்கே படிச்சி தான் கிறுக்கன் ஆனீங்களா?
கோவில்பட்டி மட்டுமல்ல அந்த ஏரியால புறந்து வளந்தாலே கிறுக்குதான் புடிக்கும்
உங்க ஆட்டோ கிராஃப் படிச்சேன். என்ன சொல்ல உங்க லிஸ்ட் பெரிய லிஸ்ட் தான் என்றாலும்... எனக்கு பறவை ஒண்ணும் சிக்கலையே அண்ணாச்சி..... NECல படிச்சா இப்படித்தான்னு நினைச்சிட்டு இருந்தேன்.. அது தப்புன்னு இப்போத்தான் புரிஞ்சது....
அன்புள்ள கணேஷ்,
தமிழ் இலக்கியத்தில் ஏதோ ஒரு பாடலில், நல்ல வெயிலில் தாகம் எடுக்க, நீர் தேடி இரு உயிரினங்கள் அலைந்து திரிந்து கடைசியில் கொஞ்சம் தண்ணீர்தான் இருக்கும் இடத்தை அடைந்து, தண்ணீர் பருக ஆரம்பிக்க, தன் இணை பருகட்டும் என்று இரு உயிரினங்களும் தண்ணீர் பருகாமல் வெறுமனே வாயை மட்டும் நீரில் வைத்திருக்க, தண்ணீரின் அளவு குறையாமலிருக்கும் காட்சியைப் படித்திருக்கிறீர்களா ?
அன்புள்ள லதா,
படித்திருக்கிறேன் ஆனால் சரியாக எந்த இலக்கியத் தொகுப்பென்று ஞாபகமில்லை.
பின்னூட்டத்திற்கு நன்றி
சம்பந்தமில்லாத பின்னூட்டக் கேள்வி கணேஷ். மன்னிக்கவும். நத்தம் கோவில்பட்டி என்பதும் கோவில் பட்டி என்பதும் ஒரே ஊரா?
Post a Comment